search icon
என் மலர்tooltip icon

    கணினி

    ரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் ப்ளூடூத் காலிங் வசதி கொண்ட புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்
    X

    ரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் ப்ளூடூத் காலிங் வசதி கொண்ட புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

    • ஜூக் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் 220 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.
    • ப்ளூடூத் காலிங், வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் வழங்கப்பட்டுள்ளன.

    ஜூக் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்வாட்ச் ஜூக் ஆக்டிவ் என அழைக்கப்படுகிறது. இதில் 1.9 இன்ச் டிஸ்ப்ளே, 240x280 பிக்சல் ரெசல்யூஷன், வளைந்த செவ்வக டயல், மெட்டல் கேசிங், உயர் ரக மென்மையான சிலிகான் ஸ்டிராப், 200-க்கு் அதிக வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன.

    புதிய ஜூக் ஆக்விட் மாடலில் 220 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது அதிகபட்சமாக 7 நாட்களுக்கான பேட்டரி லைஃப் வழங்குகிறது. இத்துடன் ப்ளூடூத் காலிங், வாய்ஸ் அசிஸ்டண்ட் என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் ஜூக் ஆக்டிவ் பாஸ்வேர்டு பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டிருக்கிறது.

    இதில் உள்ள மல்டி-ஸ்போர்ட்ஸ் மோட் விளையாட்டு வீரர்களுக்கு ஏற்றதாக இருக்கும். இத்துடன் SPO2 மாணிட்டரிங், ஹார்ட் ரேட் மாணிட்டரிங் மற்றும் ஸ்லீப் டிராக்கிங் போன்ற வசதிகளும் இதில் வழங்கப்பட்டுள்ளன.

    ஜூக் ஆக்டிவ் அம்சங்கள்:

    1.91 இன்ச் HD 240x280 பிக்சல் IPS டிஸ்ப்ளே, 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்

    ப்ளூடூத் காலிங் - ப்ளூடூத் 5.0

    இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்

    220 எம்ஏஹெச் பேட்டரி

    அதிகபட்சம் ஏழு நாட்களுக்கு பேட்டரி லைஃப்

    பல்வேறு ஸ்போர்ட்ஸ் மோட்கள்

    வாய்ஸ் அசிஸ்டண்ட் சப்போர்ட்

    ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு கனெக்டிவிட்டி

    ஹார்ட் ரேட், SpO2

    IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட்

    ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய ஜூக் ஆக்டிவ் ஸ்மார்ட்வாட்ச் புளூ, ஸ்பேஸ் கிரே மற்றும் சில்வர் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 2 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை முன்னணி ஆன்லைன் வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.

    Next Story
    ×