search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ஐகூவின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்
    X

    ஐகூவின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்

    • இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    • ஸ்டான்டர்டு கிளாஸ் பேக் வெர்ஷனும் அறிமுகமாகிறது.

    ஐகூ நிறுவனம் தனது நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு குறித்து புதிய தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி இந்திய சந்தையில் ஐகூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    புதிய ஐகூ நியோ 9 ப்ரோ மாடலில் டூயல் டோன் டிசைன், பிரீமியம் வீகன் லெதர் ஃபினிஷ், பிரத்யேக சதுரங்க வட்ட வடிவ கேமரா, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்டான்டர்டு கிளாஸ் பேக் வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.


    அம்சங்களை பொருத்தவரை ஐகூ நியோ 9 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் 1.5K LTPO AMOLED ஸ்கிரீன், 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், சோனி IMX920 சென்சார், OIS, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா மற்றும் 5160 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் இந்த ஸ்மார்ட்போனை 9 நிமிடங்களில் 1-இல் இருந்து 40 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும். மற்ற ஐகூ ஸ்மார்ட்போன்களை போன்றே ஐகூ நியோ 9 ப்ரோ மாடலும் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    Next Story
    ×