search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    விரைவில் இந்தியா வரும் மோட்டோ E சீரிஸ் ஸ்மார்ட்போன்
    X

    விரைவில் இந்தியா வரும் மோட்டோ E சீரிஸ் ஸ்மார்ட்போன்

    • மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய E சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • முன்னதாக மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி அப்டேட் வழங்குவது பற்றி மோட்டோரோலா அறிவித்து இருந்தது.

    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ E22s ஸ்மார்ட்போன் அக்டோபர் 17 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றிய தகவல் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புது மோட்டோ E22s ஸ்மார்ட்போன் விவரங்கள் மோட்டோரோலா இந்தியா வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.

    அந்த வகையில் மோட்டோ E22s மாடலில் 90Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி37 பிராசஸர், டூயல் பிரைமரி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக மோட்டோ E22s ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாத வாக்கில் ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

    மோட்டோ E22s அம்சங்கள்:

    6.5 இன்ச் HD+ 720x1600 பிக்சல் IPS LCD டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் ஹீலியோ ஜி37 பிராசஸர்

    ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ்

    4 ஜிபி ரேம்

    64 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    16MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் கேமரா

    8MP செல்பி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    பேஸ் அன்லாக்

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    10வாட் சார்ஜிங்

    எதிர்பார்க்கப்படும் விலை:

    மோட்டோ E22s ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தையில் 159.99 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 12 ஆயிரத்து 700 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அந்த வகையில் இதன் இந்திய விலை ரூ. 10 ஆயிரம் துவங்கி ரூ. 12 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    Next Story
    ×