search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் புது மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகம்
    X

    5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் புது மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

    • மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி புதிய மோட்டோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
    • புது மோட்டோ ஸ்மார்ட்போன் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட எல்சிடி டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

    மோட்டோரோலா நிறுவனம் முற்றிலும் புதிய மோட்டோ E22s ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்தது. முன்னதாக மோட்டோ E32 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் அறிமுகமாகி இருக்கிறது. இதில் 6.5 இன்ச் HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், 8MP செல்பி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி37 பிராசஸர், 16MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட் வழங்கப்பட உள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் மோட்டோ E22s ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 10 வாட் சார்ஜிங் வசதி உள்ளது.

    மோட்டோ E22s அம்சங்கள்:

    6.5 இன்ச் HD+ 1600x720 பிக்சல் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி37 பிராசஸர்

    IMG பவர் விஆர் GE8320 GPU

    4 ஜிபி ரேம்

    64 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12 மற்றும் மை யுஎக்ஸ்

    டூயல் சிம் ஸ்லாட்

    16MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் கேமரா

    8MP செல்பி கேமரா

    3.5mm ஆடியோ ஜாக்

    எப்எம் ரேடியோ

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    வாட்டர் ரெசிஸ்டண்ட்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    10 வாட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    மோட்டோ E22s ஸ்மார்ட்போன் இகோ பிளாக் மற்றும் ஆர்க்டிக் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அக்டோபர் 22 ஆம் தேதி துவங்குகிறது. புதிய மோட்டோ E22s ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    Next Story
    ×