என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மொபைல்ஸ்
டிமென்சிட்டி 9400 பிராசஸருடன் ஃபைண்ட் X8 சீரிஸ் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
- இரு மாடல்களிலும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது.
- இரு மாடல்களிலும் 32MP செல்ஃபி கேமரா உள்ளது.
ஒப்போ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபைண்ட் X8 சீரிஸ்- X8 மற்றும் X8 ப்ரோ மாடல்களை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இரு மாடல்களிலும் மீடியாடெக் டிமென்சிட்டி 9400 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த கலர்ஓஎஸ் 15 உள்ளது. முதற்கட்டமாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள X8 சீரிஸ் மாடல்கள் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று ஒப்போ தெரிவித்துள்ளது.
அம்சங்களை பொருத்தவரை ஒப்போ ஃபைண்ட் X8 மாடலில் 6.59 இன்ச் 1.5K AMOLED LTPO பேனல், 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. ஃபைண்ட் X8 ப்ரோ 6.78 இன்ச் 2K மைக்ரோ எல்இடி AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது.
இத்துடன் இரு மாடல்களிலும் மீடியாடெகி டிமென்சிட்டி 9400 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. ஃபைண்ட் X8 மாடலில் 50MP வைடு ஆங்கில் கேமரா, 50MP ஹேசில்பிலாடு போர்டிரெயிட் கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் ப்ரோ மாடலில் கூடுதலாக 50MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் 32MP செல்ஃபி கேமரா உள்ளது.
ஒப்போ ஃபைண்ட் X8 மாடலில் 5630 எம்ஏஹெச் பேட்டரி, X8 ப்ரோ மாடலில் 5910 எம்ஏஹெச் பேட்டரியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் 100 வாட் வயர்டு சார்ஜிங், 50 வாட் மேக்னடிக் வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது. புதிய ஃபைண்ட் X8 சீரிஸ் மாடல்கள் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த கலர் ஓஎஸ் 15 கொண்டுள்ளன.
இரு மாடல்களிலும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், IP69 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 5ஜி, வைபை 7, யுஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் என்எஃப்சி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஃபைண்ட் X8 சீரிஸ் விலை இந்திய மதிப்பில் ரூ. 49,615 என துவங்குகிறது.