search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    விரைவில் இந்தியா வரும் போக்கோ C50 - அசத்தல் டீசர் வெளியீடு!
    X

    விரைவில் இந்தியா வரும் போக்கோ C50 - அசத்தல் டீசர் வெளியீடு!

    • போக்கோ நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் இந்திய வெளியீடு விரைவில் நடைபெற இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் என தற்போதைய டீசர்களில் தெரியவந்துள்ளது.

    போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் போக்கோ C50 ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் IMEI மற்றும் கூகுள் பிளே சப்போர்ட் கொண்ட சாதனங்கள் பட்டியலில் இடம்பிடித்து இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் டீசரை போக்கோ இந்தியா அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி புதிய போக்கோ C50 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு விரைவில் நடைபெறலாம்.

    முன்னதாக இணையத்தில் வெளியான தகவல்களின் படி போக்கோ C50 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஜனவரி 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் போக்கோ அறிமுகம் செய்யும் முதல் ஸ்மார்ட்போனாக போக்கோ C50 இருக்கும் என தெரிகிறது. ஏற்கனவே 2021 செப்டம்பர் மாத வாக்கில் போக்கோ C31 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.

    இதுதவிர நவம்பர் மாதத்திலேயே போக்கோ C50 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என போக்கோ அறிவித்து இருந்தது. பின் எவ்வித காரணமும் தெரிவிக்காமல், இதன் வெளியீடு தாமதமானது. தற்போது அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி இருக்கும் நிலையில், போக்கோ C50 ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.

    முந்தைய தகவல்களில் போக்கோ C50 ஸ்மார்ட்போன் ரெட்மி A1+ மாடலின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன் என கூறப்பட்டது. தற்போது விற்பனை செய்யப்படும் ரெட்மி A1+ ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் HD+ டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், 400 நிட்ஸ் பிரைட்னஸ், லெதர் டெக்ஸ்ச்சர் டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் மீடியாடெக் ஹீலியோ A22 பிராசஸர், IMG பவர்விஆர் GPU, ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் ஒஎஸ், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங், 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா, கைரேகை சென்சார், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், 3.5mm ஆடியோ ஜாக் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×