search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலில் வேற லெவல் அம்சம் - அசத்தல் டீசர் வெளியீடு!
    X

    ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலில் வேற லெவல் அம்சம் - அசத்தல் டீசர் வெளியீடு!

    • ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் 200MP பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தகவல்.
    • இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    ரியல்மி நிறுவனம் முற்றிலும் புதிய மிட்-பிரீமியம் ரேஞ்ச் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 12 சீரிசுக்கு போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்கள்- ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மற்றும் ரியல்மி 11 ப்ரோ பெயர்களில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.

    இதனிடையே ரியல்மி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தனது வெய்போ அக்கவுண்டில் புதிய ஸ்மார்ட்போனின் பிரைமரி கேமரா பிரத்யேகமாக மூன் மோட் அம்சம் கொண்டிருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார். ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலில் இந்த அம்சம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இணையத்தில் வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் டெலிபோட்டோ கேமரா கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் ஜூம் அம்சம் பெற இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இது, சாம்சங் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் கேலக்ஸி S சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் ஸ்பேஸ் ஜூம் அம்சத்திற்கு போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது. சாம்சங் இந்த அம்சத்தினை கேலக்ஸி S21 மாடலில் இருந்து வழங்கி வருகிறது.

    ரியல்மி ஸ்மார்ட்போனில் இந்த அம்சம் எப்படி இயங்கும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலில் இதற்காக பிரத்யேக டெலிபோட்டோ கேமரா வழங்கப்படும் என்றும் கூடுதலாக மென்பொருள் அப்டேட்கள் மற்றும் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலில் 6.7 இன்ச் Full HD+ 120Hz டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி வழங்கப்படலாம். இத்துடன் 200MP பிரைமரி கேமரா, 16MP செல்ஃபி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, அதிகபட்சம் 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.

    சீன வெளியீட்டை தொடர்ந்து புதிய ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும். இந்திய சந்தையில் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் விலை ரூ. 24 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரியல்மி 11 ப்ரோ பிளஸ் இந்தியாவில் அறிமுகமாகும் பட்சத்தில் அதன் விலை ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    Photo Courtesy: Weibo / Ice Universe

    Next Story
    ×