search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ரியல்மியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகுமா? சிஇஒ கொடுத்த அப்டேட் என்ன தெரியுமா?
    X

    ரியல்மியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகுமா? சிஇஒ கொடுத்த அப்டேட் என்ன தெரியுமா?

    • ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டு முழுக்க ரூ. 10 ஆயிரத்தில் துவங்கி ரூ. 30 ஆயிரம் பட்ஜெட் பிரிவில் கவனம் செலுத்த இருக்கிறது.
    • சமீபத்தில் ரியல்மி நிறுவனம் 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருந்தது.

    ரியல்மி நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2023 நிகழ்வில் அதிவேக சார்ஜிங் வசதி கொண்ட சாதனத்தை அறிமுகம் செய்தது. ரியல்மியின் புதிய GT3 ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டிருந்தது. இது ஸ்மார்ட்போனினை 9 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும்.

    சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வை ஒட்டி ரியல்மி இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தனியார் நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அதில் 2023 ஆண்டிற்கான ரியல்மி நிறுவனத்தின் திட்டங்கள், மடிக்கக்கூடிய சாதனங்கள், க்ரோம்புக் மற்றும் கேமிங் போன்கள் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார்.

    அந்த வகையில், இந்த ஆண்டிற்கான திட்டமிடல் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த மாதவ் சேத், இந்திய சந்தையில் ரூ. 10 ஆயிரம் துவங்கி அதிகபட்சம் ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பிரிவில் அதிக கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்தார்.

    "ரூ. 10 ஆயிரம் துவங்கி ரூ. 30 ஆயிரம் விலையில் கிடைக்கும் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ஸ்மார்ட்போன்களை மாற்றும் வழக்கம் பல்வேறு காரணங்களால் உயர்ந்து வருகிறது. மேலும் அனைவராலும் வாங்கும் நிலை தற்போது அதிகரித்து இருக்கிறது. பலரும் வாங்கும் நிலைக்கு வந்திருப்பதால், பெரும்பாலான இளைஞர்கள் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை வாங்க நினைக்கின்றனர். இதன் காரணமாக இந்த பிரிவு ஸ்மார்ட்போன்களை மாற்றும் வழக்கம் 14-இல் இருந்து 15 மாதங்கள் வரை உயர்ந்து இருக்கிறது," என மாதவ் சேத் தெரிவித்து இருக்கிறார்.

    இதைத் தொடர்ந்து மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த மாதவ் சேத், "மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு மிகவும் குறைவு, நான் சில ப்ரோடோடைப்களை முயற்சித்து இருக்கிறேன். பயன்பாடு மிகவும் குறைவு என்பதால் பெரும்பாலும் நான் அவற்றை திறந்ததே இல்லை. ஏனெனில் அது நமக்கு தேவையில்லை.

    இது உண்மையில் வித்தியாசமான ஒன்று தான், கையில் வைத்திருக்கவும் நன்றாக இருக்கிறது, நண்பர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தும் சாதனமாக இருக்கிறது, ஆனாலும் இது உண்மையில் பயன்படுத்த நன்றாக இருக்கிறதா? இல்லை," என தெரிவித்தார்.

    "மக்கள் ஃப்ளிப் ரக மாடல்களை பயன்படுத்தவே விரும்புவர், இது ஒருவித பழமையான அனுபவத்தை நினைவூட்டுகிறது. நான் இதுகுறித்து பலரிடம் பேசியிருக்கிறேன். பெரும்பாலானோர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் வித்தியாசப்படுத்தும் சாதனம் என்றே கருதுகின்றனர்," என்று அவர் மேலும் தெரிவித்தார். இதுதவிர ரியல்மி சிஇஒ மேலும் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

    Source: Techlusive

    Next Story
    ×