search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    கீக்பென்ச் தளத்தில் லீக் ஆன ரியல்மி GT 3 - இவ்வளவு அம்சங்களா?
    X

    கீக்பென்ச் தளத்தில் லீக் ஆன ரியல்மி GT 3 - இவ்வளவு அம்சங்களா?

    • ரியல்மி நிறுவனத்தின் புதிய GT 3 ஸ்மார்ட்போன் இருவித வேரியண்ட்களில் அறிமுகமாகும் என தெரிகிறது.
    • ரியல்மி GT 3 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    ரியல்மி நிறுவனம் தனது புதிய GT சீரிஸ் ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2023 (MWC 2023) நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெற இருக்கும் மொபைல் காங்கிரஸ் விழாவில் ரியல்மி தனது GT 2 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனான ரியல்மி GT 3 மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ரியல்மி GT 3 மாடல் அதிவேக 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கும் என தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    எனினும், ரியல்மி சார்பில் இதுபற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. பென்ச்மார்கிங் வலைத்தள விவரங்களின் படி ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் 16 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் என குறிப்பிடுப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து மை ஸ்மார்ட் பிரைஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் புதிய ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தளத்தில் RMX3709 எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

    மேலும் இந்த ஸ்மார்ட்போன் சிங்கில் கோர் டெஸ்டிங்கில் 1265 புள்ளிகளையும், மல்டி-கோர் டெஸ்டிங்கில் 3885 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. கீக்பென்ச் தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் குவால்காம் பிராசஸர் மற்றும் அட்ரினோ 730 GPU கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதில் உள்ள பிராசஸர் 3.00 GHz பீக் ஃபிரீக்வன்சியில் கிளாக் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.

    ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் 16 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒஎஸ் வழங்கப்பட இருக்கிறது. கீக்பென்ச் மட்டுமின்றி ரியல்மி GT 3 விவரங்கள் ப்ளூடூத் SIG மற்றும் EEC சான்றளிக்கும் வலைத்தளங்களில் லீக் ஆகி இருந்தது. இதில் EEC வலைத்தளத்தில் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் 240 வாட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய ரியல்மி GT3 மாடல் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரியல்மி GT2 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். ரியல்மி GT2 மாடலில் 6.62 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 50MP பிரைமரி கேமரா, OIS, வைடு ஆங்கில் கேமரா, மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×