search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    GT சீரிசில் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் ரியல்மி
    X

    கோப்புப்படம்

    GT சீரிசில் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் ரியல்மி

    • ரியல்மி GT 6 மாடல் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி ரூ. 40,999 விலையில் வழங்கப்படுகிறது.
    • ரியல்மி தனது ஸ்மார்ட்போன் மாடல்களை பெரும்பாலும் பட்ஜெட் விலையில் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

    ரியல்மி நிறுவனம் தனது GT 6 ஸ்மார்ட்போனினை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இது குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 3 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போனாகும். இது மொபைல் ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில், ரியல்மி நிறுவனம் ஒவ்வொரு வருடமும் GT சீரிசில் குறைந்தது இரண்டு புதிய போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது. அந்த வகையில் GT 6 மாடல் அறிமுகம் ஆன நிலையில், ரியல்மி GT 7 Pro இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியா மற்றும் உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி GT மாடலில் ஒன்று Pro வேரியண்ட் ஆக இருக்கும். இது பெரும்பாலும் ஃபிளாக்ஷிப் மாடலாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

    ரியல்மி GT 6 மாடல் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி ரூ. 40,999 விலையில் வழங்கப்படுகிறது. ரியல்மி தனது ஸ்மார்ட்போன் மாடல்களை பெரும்பாலும் பட்ஜெட் விலையில் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

    மோட்டரோலா எட்ஜ் 50 அலட்ரா, சியோமி 14 சிவி மற்றும் ஐகூ 12 போன்ற மொபைல் மாடல்களுக்கு மாற்றாக ரியல்மி GT மாடல் மிகவும் பிரபலம் அடையும் என்று தெரிகிறது.

    ரியல்மி GT 7 Pro என்பது ரியல்மி GT சீரிசில் அடுத்த மொபைல் மாடலாக இருக்கலாம். இது பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படும் குவால்காமின் அடுத்த முதன்மை சிப்செட் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 பிராசஸரை கொண்டிருக்கும். ரியல்மி GT 7 Pro உள்ளூர் உற்பத்தியாளரின் 1.5K 8T LTPO ரக டிஸ்ப்ளே பேனலைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×