search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    பட்ஜெட் விலையில் புதிய ப்ளிப் போன்.. அசத்தல் அம்சங்களுடன் உருவாக்கும் டெக்னோ!
    X

    கோப்புப்படம் 

    பட்ஜெட் விலையில் புதிய ப்ளிப் போன்.. அசத்தல் அம்சங்களுடன் உருவாக்கும் டெக்னோ!

    • டெக்னோ பேன்டம் V போல்டு சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது.
    • டெக்னோ பேன்டம் V ப்ளிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் FCC வலைதளத்தில் லீக் ஆனது.

    டெக்னோ பேன்டம் V போல்டு மாடல் மூலம் மடிக்ககூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையின் பட்ஜெட் பிரிவில் டெக்னோ களமிறங்கியது. மற்ற முன்னணி பிரான்டுகளை போன்றில்லாமல், டெக்னோ பிரான்டு விலை உயர்ந்த, டாப் என்ட் சாதனங்களை உருவாக்கவில்லை. மாறாக பட்ஜெட் பிரிவில் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.

    பட்ஜெட் பிரிவில் நிலை நிறுத்தப்பட்ட டெக்னோ பேன்டம் V போல்டு சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், டெக்னோ நிறுவனம் புதிய ப்ளிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் டெக்னோ பேன்டம் V ப்ளிப் அல்லது பேன்டம் V யோகா பெயர்களில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் FCC வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது. அதில் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி டெக்னோ பேன்டம் V ப்ளிப் ஸ்மார்ட்போன் AD11 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. பேன்டம் V ப்ளிப் மாடல் வைபை, ப்ளூடூத், 5ஜி கனெக்டிவிட்டி வசதி கொண்டுள்ளது.

    டெக்னோ பேன்டம் V ப்ளிப் 5ஜி மாடலில் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாக டூயல் பேட்டரி செட்டப் இருக்கும். இதில் ஒரு பேட்டரி 1165 எம்ஏஹெச், மற்றொரு பேட்டரி 2735 எம்ஏஹெச் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் அதிகபட்சம் 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இதுதவிர புதிய ஸ்மார்ட்போன் பற்றிய இதர விவரங்கள் மர்மமாகவே உள்ளன.

    டெக்னோ பேன்டம் V ப்ளிப் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி டெக்னோ பேன்டம் V ப்ளிப் மாடல் ஃபுல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 8050 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 4000 எம்ஏஹெச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஹைஒஎஸ் 13, 64MP பிரைமரி கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×