search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில் 50MP கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்
    X

    ரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில் 50MP கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்

    • டெக்னோ ஸ்பார்க் சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இதில் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    டெக்னோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. டெக்னோ ஸ்பார்க் 20C என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. புதிய டெக்னோ ஸ்பார்க் 20C மாடலில் 6.6 இன்ச் HD+ டாட்-இன் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ G36 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா மற்றும் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஹை ஒ.எஸ். 13 கொண்டிருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. இத்துடன் டூயல் ஸ்பீக்கர்கள், டி.டி.எஸ். ஆடியோ, மேஜிக் ஸ்கின் 2.0 வழங்கப்பட்டு இருக்கிறது.


    டெக்னோ ஸ்பார்க் 20C அம்சங்கள்:

    6.56 இன்ச் 1612x720 பிக்சல் HD+ 90Hz டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G36 பிராசஸர்

    IMG பவர் வி.ஆர். GE 8320 GPU

    8 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஹை ஒ.எஸ். 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா

    ஏ.ஐ. கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்

    8MP செல்ஃபி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்

    3.5mm ஆடியோ ஜாக்

    எஃப்.எம். ரேடியோ

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    புதிய டெக்னோ ஸ்பார்க் 20C ஸ்மார்ட்போன் அல்பென்குளோ கோல்டு, மிஸ்டரி வைட், கிராவிட்டி பிளாக் மற்றும் மேஜிக் ஸ்கின் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை மார்ச் 5-ம் தேதி அமேசான் வலைதளத்தில் துவங்குகிறது.

    Next Story
    ×