search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ஸ்மார்ட்போனில் டிரோன் கேமரா - விவோ வேற லெவல் சாதனம்
    X

    ஸ்மார்ட்போனில் டிரோன் கேமரா - விவோ வேற லெவல் சாதனம்

    • காப்புரிமை கோரி விவோ விண்ணப்பித்து இருந்தது.
    • இதற்காக உருவாக்கப்படும் செயலி மூலம் கட்டுப்படுத்தலாம்.

    விவோ நிறுவனம் உருவாக்கும் புதிய ஸ்மார்ட்போனில் டிரோன் கேமரா செட்டப் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் விவோ ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது. முன்னதாக இந்த சாதனத்திற்கு காப்புரிமை கோரி விவோ விண்ணப்பித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக வெளியான தகவல்களில் விவோ உருவாக்கும் புது ஸ்மார்ட்போனில் உள்ள டிரோன் கேமரா, ஆக்டிவேட் செய்ததும் ஸ்மார்ட்போனில் இருந்து தனியே பிரிந்து காற்றில் மிதக்க துவங்கிவிடும். அதன்பிறகு, பயனர்கள் கேமரா எவ்வளவு தூரம் பறக்க வேண்டும் என்றும், கேமரா எந்த கோணத்தில் இருந்து படம்பிடிக்க வேண்டும் என்பதை இதற்காக உருவாக்கப்படும் செயலி மூலம் கட்டுப்படுத்தலாம்.


    இந்த சாதனம் எப்போது பொது மக்கள் பயன்பாட்டிற்காக விற்பனை செய்யப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், இத்தகைய சாதனம் விற்பனைக்கு வந்ததும், ஸ்மார்ட்போன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் முறை முற்றிலுமாக மாறிவிடும். வானில் இருந்து எடுக்கக்கூடிய ஏரியல் ஷாட்களை ஸ்மார்ட்போன் மூலமாகவே எளிதில் எடுத்துவிட முடியும்.

    டிரோன் கேமரா கொண்ட புதிய விவோ ஸ்மார்ட்போனில் தலைசிறந்த புகைப்படங்கள், வீடியோக்களை எடுக்கும் திறன் கொண்ட அதிநவீன கேமரா சென்சார்கள் வழங்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எனினும், இந்த சாதனத்தில் எவ்வளவு பெரிய பேட்டரி வழங்கப்படும் என்பது மர்மமாகவே உள்ளது.

    அசத்தலான கேமரா சிஸ்டம், ஸ்மார்ட்போன் துறையில் முற்றிலும் புதிய முயற்சியாக இந்த மாடல் வெளியாகும் போதிலும், இதன் பேட்டரி திறன் தற்போதுள்ள ஸ்மார்ட்போன்களை விட குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது. மேலும், அடிக்கடி டிரோன் கேமராவை இயக்கும் போது ஸ்மார்ட்போனின் சார்ஜ் வேகமாக குறையவும் வாய்ப்புகள் அதிகம் தான்.

    Next Story
    ×