search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    இருவித அளவுகளில் முற்றிலும் புதிய ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்த ஆப்பிள்
    X

    இருவித அளவுகளில் முற்றிலும் புதிய ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்த ஆப்பிள்

    • ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே முற்றிலும் புதிய ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • 11 மற்றும் 12.9 இன்ச் அளவுகளில் கிடைக்கும் புதிய ஐபேட் ப்ரோ மாடல்களில் M2 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஐபேட் ப்ரோ மாடல்களில் M2 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது முந்தைய தலைமுறை பிராசஸரை விட 15 சதவீதம் வேகமான சிபியு மற்றும் 35 சதவீதம் வேகமான ஜிபியு செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் புதிய ஆப்பிள் பென்சில் மாடலும் அரிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    வைபை 6E கனெக்டிவிட்டி கொண்ட முதல் சாதனமாக இது அமைந்துள்ளது. 11 இன்ச் ஐபேட் ப்ரோ மாசலில் எல்இடி பேக்லிட் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே, 12.9 இன்ச் மாடலில் மினி எல்இடி லிக்விட் ரெட்டினா XDR டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஐபேட் ஒஎஸ் 16, புதிய ஆப்பிள் பென்சில் வழங்கப்பட்டு இருக்கிறது. இது டிஸ்ப்ளே மீது 12 மில்லிமீட்டர் அளவிலேயே பென்சிலை கண்டறிந்து விடும்.

    புதிய ஐபேட்களில் 5ஜி மாடலும் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் தண்டர்போல்ட் மற்றும் யுஎஸ்பி 4, யுஎஸ்பி சி போர்ட், 12MP அல்ட்ரா வைடு ட்ரூடெப்த் செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் புதிய ஐபேட் ப்ரோ 11 இன்ச் வைபை மாடல் விலை ரூ. 81 ஆயிரத்து 999 என துவங்குகிறது. டாப் எண்ட் மாடலான ஐபேட் ப்ரோ 12.9 இன்ச் 2டிபி செல்லுலார் மாடல் விலை ரூ. 2 லட்சத்து 37 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய ஐபேட் ப்ரோ மாடல்கள் ஸ்பேஸ் கிரே மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இவற்றுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை அக்டோபர் 26 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

    Next Story
    ×