search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    ரூ. 1.79 கோடி விலையில் புது பிஎம்டபிள்யூ கார் இந்தியாவில் அறிமுகம்
    X

    ரூ. 1.79 கோடி விலையில் புது பிஎம்டபிள்யூ கார் இந்தியாவில் அறிமுகம்

    • பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய M சீரிஸ் ஸ்பெஷல் எடிஷன் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • M சீரிசின் 50-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் 50 ஜாரெ எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய M5 50 ஜாரெ M எடிஷன் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ M5 50 ஜாரெ M எடிஷன் விலை ரூ. 1 கோடியே 79 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் இது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எட்டாவது 50 ஜாரெ எடிஷன் மாடல் ஆகும். இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த கார் இந்தியாவுக்கு சிபியு முறையில் கொண்டுவரப்படுகிறது.

    50 ஜாரெ எடிஷன் மாடலில் லிமிடெட் எடிஷன் M5 கார் பிஎம்டபிள்யூ தனித்துவம் மிக்க பெயிண்ட் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. இது அவென்டியுரைன் ரெட் மற்றும் 50 ஜாரெ M எடிஷன் லோகோ அடங்கிய பிஎம்டபிள்யூ பாரம்பரியம் மிக்க கிட்னி கிரில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே M எடிஷன் லோகோ காரின் பின்புறம், வீல் ஹப் கேப்களிலும் வழங்கப்பட்டு உள்ளது.

    பிஎம்டபிள்யூ கிட்னி கிரில் சரவுண்ட், M சீரிஸ் டபுள் பார்கள், M கில், மிரர் கேப் உள்ளிட்டவைகளில் மெஷ் உள்ளது. காரின் உள்புறம் M5 50 ஜாரெ M எடிஷன் மாடலில் அரகோன் பிரவுன் நிற மெரினோ லெதர், பிஎம்டபிள்யூ தனித்துவம் மிக்க ஹெட்லைனர், ஹெட் ரெஸ்ட்ரெயிண்ட்களில் M5 லோகோ வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய பிஎம்டபிள்யூ M5 50 ஜாரெ எடிஷனில் ட்வின் டர்போ 4.4 லிட்டர் வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 625 ஹெச்பி பவர், 750 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு M ஸ்பெக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.3 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    Next Story
    ×