search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் புது ஐகூ ஸ்மார்ட்போன் அறிமுகம்
    X

    120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் புது ஐகூ ஸ்மார்ட்போன் அறிமுகம்

    • ஐகூ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி புதிய ஐகூ நியோ சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • ஐகூ நியோ சீரிஸ் ஐகூ நிறுவனத்தின் மிட்-ரேன்ஜ் விலையில் கிடைக்கும் கேமிங் ஸ்மார்ட்போன் மாடல்கள் ஆகும்.

    ஐகூ நிறுவனம் சீன சந்தையில் முற்றிலும் புதிய நியோ 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. புதிய ஐகூ நியோ 7 மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர், 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED ஸ்கிரீன், 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 50MP பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஐகூ நியோ 7 மாடலில் 6.78 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒரிஜின் ஒஎஸ், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    ஐகூ நியோ 7 அம்சங்கள்:

    6.78 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர்

    மாலி G710 MC10 GPU

    8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

    8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி

    12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி

    12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP மேக்ரோ கேமரா

    16MP செல்பி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒரிஜின் ஒஎஸ்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    120 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஐகூ நியோ 7 ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை CNY2699 இந்திய மதிப்பில் ரூ.30 ஆயிரத்து 962 என்றும் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை CNY3299 இந்திய மதிப்பில் ரூ. 37 ஆயிரத்து 830 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 31 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    Next Story
    ×