search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    இது போன் தானா? கையிலும் வச்சிக்கலாம் இல்லைனா கையிலயே மாட்டிக்கலாம்
    X

    இது போன் தானா? கையிலும் வச்சிக்கலாம் இல்லைனா கையிலயே மாட்டிக்கலாம்

    • லெனோவோ டெக் வொர்ல்டு 2023 நிகழ்வில் மோட்டோரோலா கான்செப்ட் போன் அறிமுகம்.
    • மணிக்கட்டில் வாட்ச் அல்லது ரிஸ்ட்பேண்ட் போன்று அணிந்து கொள்ளலாம்.

    மடிக்கக்கூடிய சாதனங்களின் விற்பனை மெல்ல வளர்ந்து வரும் நிலையில், மோட்டோரோலா இதனை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. மோட்டோரோலா அறிமுகம் செய்திருக்கும் புதிய கான்செப்ட் போன் இதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற லெனோவோ டெக் வொர்ல்டு 2023 நிகழ்வில் மோட்டோரோலாவின் ஃபிளெக்சிபில் pOLED டிஸ்ப்ளே கான்செப்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்த ஸ்மார்ட்போனில் FHD + pOLED ஸ்கிரீன் உள்ளது. இதனை பின்புறமாக மடித்து மணிக்கட்டில் வாட்ச் அல்லது ரிஸ்ட்பேண்ட் போன்று அணிந்து கொள்ளலாம். இந்த அதிநவீன அடாப்டிவ் டிஸ்ப்ளே கான்செப்ட் பல்வேறு நிலைகளில் வைத்துக் கொள்ளலாம். அடாப்டிவ் டிஸ்ப்ளேவினை வழக்கமான ஆண்ட்ராய்டு போன் போன்றும் பயன்படுத்தலாம், அல்லது மணிக்கட்டில் அணிந்த படியும் பயன்படுத்தலாம்.

    மடிக்கப்படாத நிலையில், இந்த ஸ்மார்ட்போன் 6.9 இன்ச் அளவில் முழுமையான ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்குகிறது. மடிக்கப்பட்ட நிலையில், இது 4.6 இன்ச் அளவில் மாறிவிடும். மடிக்கப்பட்ட நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை மோட்டோரோலா ரேசர் பிளஸ் மாடலின் கவர் ஸ்கிரீன் போன்று பயன்படுத்தலாம்.

    மோட்டோரோலாவின் புதிய வகை கான்செப்ட் போன் எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. முன்னதாக இந்த கான்செப்ட் போனிற்கான முன்னோட்டம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2023 நிகழ்வில் காண்பிக்கப்பட்டது.

    மோட்டோரோலா மட்டுமின்றி விவோ, டிரான்சிஷன் ஹோல்டிங்ஸ் மற்றும் டி.சி.எல். போன்ற நிறுவனங்களும் புதிய வகை ரோலபில் டிஸ்ப்ளேவினை உருவாக்கி வருகின்றன. இவை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    Next Story
    ×