search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ஒரே மாதிரி டிசைன், இது மட்டும் ஸ்பெஷல்.. வேற லெவலில் ரெடியாகும் நத்திங் போன் 2a பிளஸ்
    X

    ஒரே மாதிரி டிசைன், இது மட்டும் ஸ்பெஷல்.. வேற லெவலில் ரெடியாகும் நத்திங் போன் 2a பிளஸ்

    • நத்திங் போன் 2a போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கும்.
    • இந்த மாடலிலும் க்ளிம்ப் இன்டர்பேஸ் வழங்கப்படும்.

    நத்திங் நிறுவனம் விரைவில் தனது புது ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. நத்திங் போன் 2a பிளஸ் என அழைக்கப்படும் புது மாடல் வருகிற 31 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், புது ஸ்மார்ட்போன் வெளியீடு தொடர்பான டீசர்களை நத்திங் நிறுவனம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.

    அந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் டீசர்களில் புதிய நத்திங் போன் 2a பிளஸ் மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் நத்திங் போன் 2a போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    தோற்றத்தில் ஒரே மாதிரி காட்சியளிக்கும் நிலையில், நத்திங் போன் 2a பிளஸ் மாடலில் டிமென்சிட்டி 8300 அல்லது ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 பிராசஸர் என இரண்டில் ஒன்று வழங்கப்படும் என்று தெரிகிறது. ஒரே டிசைன் தவிர நத்திங் போன் 2a பிளஸ் அளவில் சற்று பெரியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த மாடலிலும் க்ளிம்ப் இன்டர்பேஸ் வழங்கப்பட்டு இருக்கும்.

    புதிய பிளஸ் ரக மாடல் நத்திங் போன் 2 மற்றும் மிட் ரேஞ்ச் போன் 2a மாடல்களின் இடையில் நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது. வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    Next Story
    ×