search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    அதிவேக சார்ஜிங் திறன் கொண்ட ஸ்மார்ட்போன்.. விரைவில் அறிமுகம் செய்ய ரியல்மி திட்டம்..!
    X

    கோப்புப் படம்

    அதிவேக சார்ஜிங் திறன் கொண்ட ஸ்மார்ட்போன்.. விரைவில் அறிமுகம் செய்ய ரியல்மி திட்டம்..!

    • இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி GT 5 என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
    • ரியல்மி மட்டுமின்றி ஒன்பிளஸ் நிறுவனமும் 150 வாட் சார்ஜிங் திறன் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல்.

    ரியல்மி நிறுவனம் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் 5200 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 150 வாட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 240 வாட் சார்ஜிங் திறன் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் 4600 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    புதிய ஸ்மார்ட்போன் குறித்து டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், ரியல்மி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஸ்மார்ட்போன் 150 வாட் சார்ஜிங் வசதி மற்றும் 5200 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் இதே ஸ்மார்ட்போனின் 240 வாட் சார்ஜிங் வசதி கொண்ட வேரியண்ட் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதில் 4600 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    கோப்புப் படம்

    இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி GT 5 என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. ரியல்மி மட்டுமின்றி ஒன்பிளஸ் நிறுவனமும் 150 வாட் சார்ஜிங் திறன் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் சொல்யுஷன் எனும் தொழில்நுட்பம் வழங்கப்படுவதாக தெரிகிறது.

    எனினும், இந்த ஸ்மர்ட்போனில் மிக குறைந்த திறன் கொண்ட பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் எந்த பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. முன்னதாக ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி GT நியோ 5 ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்த ஸ்மார்ட்போனில் 240 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 4600 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது. இத்துடன் ரியல்மி GT நியோ 5 மாடலின் 150 வாட் சார்ஜிங் வசதி மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் ரியல்மி GT 3 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×