search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி டேப் S9 அல்ட்ரா அம்சங்கள்
    X

    இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி டேப் S9 அல்ட்ரா அம்சங்கள்

    • சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் S9 அல்ட்ரா மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
    • புதிய டேப் S9 அல்ட்ரா மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஃபார் கேலக்ஸி பிராசஸர் வழங்கப்படுகிறது.

    சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி டேப் S8 அல்ட்ரா மாடல் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது. டேப் S8 சீரிசில் விலை உயர்ந்த மாடலாகவும், ஃபிளாக்ஷிப் தர அம்சங்களையும் இது கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி டேப் S9 அல்ட்ரா மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது குறித்து ஐஸ் யுனிவர்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி புதிய கேலக்ஸி டேப் S9 அல்ட்ரா மாடல் அளவில் 208.6x326.4x5.5mm இருக்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி டேப் S8 அல்ட்ரா அளவீடுகளும் இதே போன்றே இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய டேப் S9 அல்ட்ரா மாடலின் எடை அதன் முந்தைய வெர்ஷனை விட 11 கிராம் வரை அதிகரித்து இருக்கும் என தெரிகிறது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி டேப் S9 அல்ட்ரா மாடலில் 14.6 இன்ச் WQXGA+ 2960x1848 பிக்சல் ரெல்யூஷன் கொண்ட ஸ்கிரீன், சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இத்துடன் ஒவர் கிளாக் செய்யப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஃபார் கேலக்ஸி பிராஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது.

    இத்துடன் IP சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 11200 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என தெரிகிறது. இவைதவிர எஸ் பென் சப்போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஏகேஜி டியுன் செய்த ஸ்பீக்கர்கள், 5ஜி கனெக்டிவிட்டி, அதிநவீன ஒன் யுஐ மென்பொருள் வழங்கப்படலாம்.

    Next Story
    ×