search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    சர்வதேச நிகழ்வில் Flagship போன் அறிமுகம் செய்யும் சியோமி - அசத்தல் டீசர் வெளியீடு
    X

    சர்வதேச நிகழ்வில் Flagship போன் அறிமுகம் செய்யும் சியோமி - அசத்தல் டீசர் வெளியீடு

    • புதிய சியோமி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • சியோமி 14 சீரிஸ் மாடல்கள் தலைசிறந்த கேமரா சிஸ்டம் கொண்டிருக்கும்.

    சியோமி நிறுவனம் தனது சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 2024 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. வரும் பிப்ரவரி 25-ம் தேதி பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் முற்றிலும் புதிய சியோமி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய ஸ்மார்ட்போனிற்காக சியோமி நிறுவனம் லெய்காவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. இதன் மூலம் சியோமி 14 சீரிஸ் மாடல்கள் தலைசிறந்த கேமரா சிஸ்டம் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    "இந்த போன் மனிதர்கள் புரிந்து கொள்ளும் வகையை மிஞ்சும் அளவுக்கு புகைப்படங்களை வெளிப்படுத்துகிறது. லெய்காவுடன் இணைந்து மொபைல் புகைப்பட கலையில் முற்றிலும் புதிய அத்தியாயத்தை துவங்குகிறோம்," என சியோமி தெரிவித்துள்ளது.


    சியோமி 14 மற்றும் சியோமி 14 ப்ரோ மாடல்கள் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் சியோமி 14 அல்ட்ரா மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுபற்றிய அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

    சர்வதேச வெளியீட்டுடன் சியோமி நிறுவனம் புதிய சியோமி 14 சீரிஸ் இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசர்களையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், சியோமி 14 சீரிஸ் மாடல்கள் அதன் சர்வதேச வெளியீட்டின் போதே இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம்.

    சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் சியோமி நிறுவனம் தனது சியோமி 14 சீரிஸ் மாடல்களை பிப்ரவரி 25-ம் தேதி (இந்திய நேரப்படி இரவு 7.30 மணி) அறிமுகம் செய்ய இருக்கிறது.

    Next Story
    ×