search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    வாட்ச் விற்பனைக்கு தடையை நீக்குங்க.. நீதிமன்றத்தில் ஆப்பிள் மேல்முறையீடு..
    X

    வாட்ச் விற்பனைக்கு தடையை நீக்குங்க.. நீதிமன்றத்தில் ஆப்பிள் மேல்முறையீடு..

    • வர்த்தக கூட்டமைப்பின் தடை உத்தரவில் மாற்றம் செய்ய முடியாது.
    • மேல்முறையீடு செய்து அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

    ஆப்பிள் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட ஆப்பிள் வாட்ச் மாடல்களின் இறக்குமதிக்கு அமெரிக்காவில் உள்ள சர்வதேச வர்த்தக கூட்டமைப்பு தடை விதித்தது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது வாட்ச் மாடல்களை அமெரிக்க சந்தையில் விற்பனை செய்ய முடியாத சூழல் உருவானது. இது தொடர்பான உத்தரவில் இறுதி முடிவை அமெரிக்க அதிபர் தலைமையிலான அரசு எடுக்க வேண்டியிருந்தது.

    அந்த வகையில், வர்த்தக கூட்டமைப்பின் தடை உத்தரவில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக தடை உத்தரவை எதிர்த்து ஆப்பிள் நிறுவனம் மேல்முறையீடு செய்து அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.


    மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான மசிமோ மற்றும் ஆப்பிள் இடையே கடந்த 2020 முதல் காப்புரிமை விவகாரத்தில் பிரச்சினை இருந்து வருகிறது. மசிமோ சார்பில் பதிவு செய்யப்பட்டிருந்த பிலட் ஆக்சிஜன் சென்சிங் அம்சம் தொடர்பான காப்புரிமையை ஆப்பிள் மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இந்த விவகாரத்தில் ஆப்பிள் காப்புரிமையை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 போன்ற மாடல்களின் விற்பனைக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவு காரணமாக இரு வாட்ச் மாடல்களை ஆப்பிள் ஆன்லைன் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களில் வாங்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது.

    Next Story
    ×