search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    iphone
    X

    டாடா ஆலையில் தீ விபத்து.. மீண்டும் சீனா பக்கம் போகும் ஆப்பிள்..?

    • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் அசெம்பில் செய்யப்பட இருந்தன.
    • இந்த தேவையில் 15 சதவீதத்தை பூர்த்தி செய்யவே போராடுகிறது

    தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள டாடா உற்பத்தி ஆலையில், சில தினங்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, அந்த ஆலையில் உற்பத்தி பணிகள் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையில் வைத்து தான் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் அசெம்பில் செய்யப்பட இருந்தன.

    இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் சம்பந்தப்பட்ட பாகங்களை சீனா அல்லது வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் ஆலையில் இருந்து ஏற்பாடு செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்து ஏற்பட்ட ஆலையில் டாடா நிறுவனம் ஐபோனின் பேக் பேனல்கள் மற்றும் இதர பாகங்களை உற்பத்தி செய்து ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு வழங்க இருந்தது.

    ஹாங்காங்கை சேர்ந்த கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் நிறுவனம் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறும் போது, "அக்டோபர் இறுதியில் இருந்து நவம்பர் மாத தொடக்கம் வரையிலான காலக்கட்டம் இந்திய பண்டிகைக் காலம் என்பதால் ஐபோன் 14 மற்றும் 15 மாடல்களின் உள்ளூர் விற்பனை 1.5 மில்லியன் யூனிட்கள் என்று கணிக்கப்படுகிறது. எனினும், ஆப்பிள் இந்த தேவையில் 15 சதவீதத்தை பூர்த்தி செய்யவே போராடுகிறது," என தெரிவித்துள்ளது.

    உள்ளூர் விற்பனையைத் தவிர, இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் ஐபோன்களை ஏற்றுமதி செய்கிறது. மேலும் சில பகுதிகள் மொத்தமாக $250 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ளவை என கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து டாடா நிறுவனம் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

    Next Story
    ×