search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ஆப்பிள் விஷன் ப்ரோ முன்பதிவு துவக்கம் - விலை, அம்சங்கள் என்னென்ன?
    X

    ஆப்பிள் விஷன் ப்ரோ முன்பதிவு துவக்கம் - விலை, அம்சங்கள் என்னென்ன?

    • ஆப்பிள் விஷன் ப்ரோ மாடலில் M2 பிராசஸர், புதிய R1 சிப் உள்ளது.
    • விஷன் ப்ரோ மாடலில் வைபை 6, ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் விஷன் ப்ரோ மாடலுக்கான முன்பதிவு துவங்கியது. முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டுமே விஷன் ப்ரோ ஹெட்செட்டுக்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளன. முன்பதிவை தொடர்ந்து பிப்ரவரி 2-ம் தேதி இதன் விற்பனை துவங்குகிறது. ஆப்பிள் விஷன் ப்ரோ மாடலில் ஆப்பிளின் M2 பிராசஸர் மற்றும் புதிய R1 சிப் வழங்கப்பட்டு இருக்கிறது.

    விஷன் ப்ரோ ஹெட்செட் உடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய இரு ஹெட்பேன்ட் வழங்கப்படுகிறது. இத்துடன் மினிமலிஸ்ட் சோலோ நிட் பேன்ட், ஸ்டேபிலிட்டி கொண்ட டூயல் லூப் பேன்ட் வழங்கப்படுகிறது. இந்த ஹெட்செட்-இன் பெட்டி வெளிச்சம் புகாத வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் மென்மையானை குஷன்கள் உள்ளன.


    அம்சங்களை பொருத்தவரை விஷன் ப்ரோ மாடலில் 23 மில்லியன் பிக்சல்கள் அடங்கிய, அதிக ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே சிஸ்டம் இரு டிஸ்ப்ளேக்களிடையே வழங்கப்பட்டு உள்ளன. இதில் உள்ள டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ், 96 ஹெர்ட்ஸ் மற்றும் 100 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்களை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டுள்ளது.

    இத்துடன் பிரத்யேக டூயல் சிப் டிசைன் மற்றும் ஆப்பிள் சிலிகான் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் அசாத்திய டிஸ்ப்ளே அனுபவத்தை பயனர்களுக்கு கடத்தும் திறன் கொண்டிருக்கிறது. ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் கொண்டு பயனர்கள் தங்களின் நினைவுகளை திரும்பி பார்க்கலாம்.


    ஆப்பிள் விஷன் ப்ரோ மாடலில் வைபை 6, ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி, அதிகபட்சம் 1080 பிக்சல் தரத்தில் ஏர்பிளே சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் மொத்தம் ஆறு மைக்ரோபோன்கள், இரண்டு பிரைமரி கேமரா சென்சார்கள், ஆறு டிராக்கிங் கேமராக்கள், கண்களை டிராக் செய்ய நான்கு கேமராக்கள், LiDAR ஸ்கேனர், ட்ரூடெப்த் கேமரா மற்றும் ஆறு சென்சார்கள் வழங்கப்படுகின்றன.

    விஷன் ப்ரோ ஹெட்செட் வெளிப்புற பேட்டரி பேக் மூலம் சக்தியூட்டப்படுகிறது. பேட்டரி பேக்-ஐ பயனர்கள் தனி கேபிள் மூலம் விஷன் ப்ரோ ஹெட்செட் உடன் இணைத்து சார்ஜிங் செய்து கொள்ளலாம். இதில் உள்ள பேட்டரிகளின் திறன் குறித்து இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. விஷன் ப்ரோ ஹெட்செட்-இன் எடை 650 கிராம்கள் வரை இருக்கலாம். தனியே வழங்கப்படும் பேட்டரி பேக் எடை 353 கிராம் ஆகும்.

    ஆப்பிள் விஷன் ப்ரோ பேஸ் மாடல் 256 ஜி.பி. மெமரி விலை 3 ஆயிரத்து 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2.9 லட்சம் என துவங்குகிறது. இதன் 512 ஜி.பி. மற்றும் 1 டி.பி. மெமரி மாடல்களின் விலை முறையே 3 ஆயிரத்து 699 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3.07 லட்சம் மற்றும் 3 ஆயிரத்து 899 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3 லட்சத்து 24 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×