search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    கம்மி காசுல புது வாட்ச்.. பக்கா பிளான் போடும் ஆப்பிள்..
    X

    கம்மி காசுல புது வாட்ச்.. பக்கா பிளான் போடும் ஆப்பிள்..

    • புதிய மாடலில் பிளாக் செராமிக் பேக் பேனல் வழங்கப்படுகிறது.
    • ஆக்ஷன் பட்டன் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலின் புது வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவின் ரிடிசைன் செய்யப்பட்ட மாடல் ரெண்டர்கள் எஃப்.சி.சி. தளத்தில் வெளியானதை தொடர்ந்து இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.

    புதிய தகவல்களின் படி புதிய ஆப்பிள் வாட்ச் மாடல் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலில் இருப்பதை போன்ற ரக்கட் தோற்றம், வழக்கமான டிஜிட்டல் கிரவுன், ஆக்ஷன் பட்டன், ஸ்பீக்கர் கிரில், மைக்ரோபோன் உள்ளிட்டவைகளை கொண்டிருக்கிறது. இதன் பின்புறம் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் பழைய மாடல்களில் இருப்பதை போன்ற பிளாக் செராமிக் பேக் பேனல் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் இதில் உள்ள ஆக்ஷன் பட்டன் ரிடிசைன் செய்யப்பட்டு, பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. உண்மையில் இந்த வாட்ச் விற்பனைக்கு வரும் பட்சத்தில், இந்த மாடல் அல்ட்ரா பிராண்டிங் இன்றி அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. எனினும், இந்த ஆப்பிள் வாட்ச் விலை தற்போதைய மாடல்களை விட குறைந்த விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    செப்டம்பர் 2022 ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலையும், அதன்பிறகு கடந்த செப்டம்பரில் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலையும் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலின் விலை ரூ. 89 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 என இரு மாடல்களிலும் ஏரோஸ்பேஸ் ரக அலுமினிம்-தர டைட்டானியம் கேஸ், மெட்டல் ஆக்ஷன் பட்டன், சஃபயர் க்ரிஸ்டல் பிளாக் பேனல் வழங்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×