search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 பிராசஸருடன் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் - அசுஸ் அசத்தல்?
    X

    ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 பிராசஸருடன் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் - அசுஸ் அசத்தல்?

    • மேம்பட்ட வெர்ஷன் 2024 ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தது.
    • ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 பிராசஸர் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    அசுஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்ஃபோன் 10 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது சென்ஃபோன் சீரிசில் கடைசி மாடலாக இருக்கும் என கூறப்பட்டது. எனினும், இந்த தகவல்களை மறுத்த அசுஸ் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் 2024 ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தது.

    அந்த வகையில், அசுஸ் சென்ஃபோன் 11 விவரங்கள் கூகுள் பிளே கன்சோலில் இடம்பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 பிராசஸர் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில், அசுஸ் சென்ஃபோன் 11 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இடம்பெற்றுள்ளது.


    அதில், பிராசஸரின் பெயர் சரியாக இடம்பெறவில்லை என்ற போதிலும், அது ஆக்டா கோர் குவால்காம் சிப்செட் மற்றும் அட்ரினோ 830 GPU கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 ஆக இருக்கலாம் என்றே தெரிகிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சென்ஃபோன் 10 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்பட்டது.

    அந்த வகையில், இதன் மேம்பட்ட வெர்ஷனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்பட்டது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சென்ஃபோன் 11 மாடலில் அதிகபட்சம் 16 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 14 ஒ.எஸ். வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இதன் பவர் பட்டன் மற்றும் வால்யூம் பட்டன்கள் ஸ்மார்ட்போனின் வலதுபுறம் இடம்பெற்று இருக்கும் என தெரிகிறது.

    Next Story
    ×