search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    டுவிட்டர் CEO பதவியை ராஜினாமா செய்கிறேன் - டுவிஸ்ட் வைக்கும் எலான் மஸ்க்!
    X

    டுவிட்டர் CEO பதவியை ராஜினாமா செய்கிறேன் - டுவிஸ்ட் வைக்கும் எலான் மஸ்க்!

    • டுவிட்டர் சிஇஒ பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமா என பயனர்களிடம் எலான் மஸ்க் கருத்துக்கணிப்பு நடத்தினார்.
    • கருத்துக் கணிப்பில் 57.5 சதவீதம் பேர் எலான் மஸ்க் டுவிட்டர் சிஇஒ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பதில் அளித்தனர்.

    டுவிட்டர் நிறுத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியை ஏற்க தகுதியான நபரை தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். மேலும் இந்த பொறுப்பிற்குரிய நபர் தேர்வானதும், தான் பதவியை ராஜினாமா செய்வதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி பொறுப்பை ஏற்க முட்டாள்தனமான நபரை தேடி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    முன்னதாக டுவிட்டர் தலைவர் பொறுப்பில் தான், தொடர வேண்டுமா எனும் கேள்வியை எலான் மஸ்க் கருத்துக் கணிப்பாக கேட்டிருந்தார். சுமார் 1.7 கோடி பேர் இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டு பதில் அளித்தனர். இதில் கிட்டத்தட்ட 57 சதவீதம் பேர் எலான் மஸ்க் டுவிட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என பதில் அளித்தனர். மீதமுள்ளவர்கள் எலான் மஸ்க் டுவிட்டர் தலைவராக தொடர்ந்து நீடிக்க வேண்டும் என பதில் அளித்து இருந்தனர்.

    கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இரண்டு நாட்கள் கழிந்த நிலையில் டுவிட்டர் சிஇஒ பதவியை ராஜினாமா செய்வது பற்றி எலான் மஸ்க் கருத்து தெரிவித்தார். அதில், "இந்த பணியில் சேர, முட்டாள்தனமான நபரை நான் தேடி முடித்ததும் சிஇஒ பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்து விடுகிறேன். அதன் பின் மென்பொருள் மற்றும் சர்வெர் குழுக்களை மட்டும் நிர்வகிக்கிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.

    "கேள்வி சிஇஒ-வை கண்டுபிடிப்பது இல்லை, மாறாக டுவிட்டர் தளத்தை லைவாக வைத்துக் கொள்ளும் சிஇஒ-வை கண்டுபிடிப்பது தான்," என எலான மஸ்க் மேலும் தெரிவித்தார். முன்னதாக எலான் மஸ்க் வெளியிட்ட மற்றொரு பதிவில், "நீங்கள் விரும்புவதில் மிகவும் கவனமாக இருங்கள், ஏனெனில் உங்களுக்கு அது கிடைக்கவும் செய்யும்," என குறிப்பிட்டு இருந்தார்.

    Next Story
    ×