search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    டுவிட்டர் தலைவராக தொடரனுமா? பயனர் கருத்தை கேட்கும் எலான் மஸ்க்!
    X

    டுவிட்டர் தலைவராக தொடரனுமா? பயனர் கருத்தை கேட்கும் எலான் மஸ்க்!

    • டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து தளத்தில் ஏராள மாற்றங்களை மேற்கொள்ளும் பணிகளில் எலான் மஸ்க் ஈடுபட்டு வருகிறார்.
    • முதற்கட்டமாக டுவிட்டர் ஊழியர்களை பணிநீக்கம் செய்த எலான் மஸ்க் தற்போது முக்கிய முடிவை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

    எலான் மஸ்க் தனது டுவிட்டர் தளத்தில் பயனர்களிடம், தான் டுவிட்டர் நிறுவன தலைவராக தொடர வேண்டுமா? என்ற கேள்வியை கருத்துக்கணிப்பாக பதிவிட்டுள்ளார். மேலும் கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி பயனர் விருப்பத்திற்கு செவி சாய்ப்பதாக தெரிவித்து இருக்கிறார். இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணியுடன் நிறைவு பெற இருக்கிறது. டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து கடந்த சில மாதங்களில் டுவிட்டர் தலைமை செயல் அதிகாரியாக எலான் மஸ்க் ஏராளமான அதிரடி நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறார்.

    ஆயிரக்கணக்கான டுவிட்டர் ஊழியர்களை பணி நீக்கம் செய்ததில் துவங்கி, டுவிட்டர் புளூ சந்தாவில் ஏராள மாற்றங்கள், நீண்ட காலமாக முடக்கப்பட்டு இருந்த, சர்ச்சைக்குரிய அக்கவுண்ட்களை மீண்டும் டுவிட்டரில் அனுமதித்தது என தொடர்ந்து அதிரடி முடிவுகளை எடுப்பதில் எலான் மஸ்க் தீவிரமாக செயல்பட்டு வந்தார். ஏற்கனவே டுவிட்டர் தலைமை செயல் அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றுவதில் விருப்பம் இல்லை என ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

    தற்போது டெஸ்லா இன்க், ஸ்பேஸ் எக்ஸ், தி போரிங் கம்பெனி, நியூராலின்க், மஸ்க் பவுன்டேஷன் போன்ற நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக எலான் மஸ்க் பதவி வகித்து வருகிறார். விளம்பரதாரர்கள் தளத்தை விட்டு விலகுவது, வருவாயில் தொடர்ந்து சரிவு நிலை போன்ற காரணங்களால் எலான் மஸ்க் தொடர்ந்து வருவாயை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். எனினும், நிறுவனம் திவாலாகும் நிலைக்கு தள்ளப்படலாம் என்றும் தெரிவித்து இருந்தார்.

    முன்னதாக மூத்த பத்திரிகையாளர்கள் பலரின் டுவிட்டர் கண்க்குகளை அந்நிறுவனம் முடக்கியது. டுவிட்டரின் புதிய தனியுரிமை கொள்கைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்தது. இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதன் பேரில் முடக்கப்பட்ட அக்கவுண்ட்கள் மீண்டும் விடுவிக்கப்பட்டது.

    Next Story
    ×