search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ஐபேட் ப்ரோ விவகாரம் - ஒரே வீடியோவில் ஆப்பிளை சம்பவம் செய்து விளம்பரம் தேடிய சாம்சங்
    X

    ஐபேட் ப்ரோ விவகாரம் - ஒரே வீடியோவில் ஆப்பிளை சம்பவம் செய்து விளம்பரம் தேடிய சாம்சங்

    • ஆப்பிள் அந்த விளம்பர வீடியோவுக்கு மன்னிப்பு கோரியது.
    • கேலக்ஸி டேப் மாடலுக்கு விளம்பரமாக அமைந்துள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தான் மேம்பட்ட ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்தது. மேலும், புதிய ஐபேட் ப்ரோ மாடலுக்கான விளம்பர வீடியோ ஒன்றை ஆப்பிள் வெளியிட்டது.

    இந்த வீடியோவில் கணினிகள், லேப்டாப்கள், பெயிண்ட், இசை கருவிகள் என கலை சார்ந்த பொருட்கள் அனைத்தையும் அழகாக அடுக்கி வைத்து, அவற்றை ராட்சத நசுக்கு இயந்திரம் கொண்டு நசுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த விளம்பர வீடியோவுக்கு பலத்தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஆப்பிள் அந்த விளம்பர வீடியோவுக்கு மன்னிப்பு கோரியது.

    ஐபேட் ப்ரோ மாடலுக்கான ஆப்பிள் விளம்பர வீடியோ தொடர்பான சர்ச்சை சற்று ஓய்ந்துள்ளது. இந்த நிலையில், சாம்சங் நிறுவனம் ஐபேட் ப்ரோ விளம்பர விவகாரத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இது ஆப்பிள் வெளியிட்ட வீடியோவுக்கு பதில் அளிக்கும் வகையிலும், கேலக்ஸி டேப் மாடலுக்கு விளம்பரமாகவும் அமைந்துள்ளது.

    சாம்சங் தற்போது வெளியிட்டுள்ள விளம்பர வீடியோவில், கீழே உடைந்து இருக்கும் ஏராளமான பொருட்களில் பெண் ஒருவர் இசைக்கருவியை எடுத்து வந்து இருக்கையில் அமர்கிறார். பிறகு அருகில் உள்ள டேப் ஒன்றில் இசைக்கருவியை இயக்கும் குறிப்புகளை பார்த்துக் கொண்டே இசைக்கருவியை வாசிக்க ஆரம்பிக்கிறார்.

    வீடியோவில் அந்த பெண் பயன்படுத்தும் டேப்லெட் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் மாடல் ஆகும். இந்த வீடியோ முடிவில் கிரியேடிவிட்டியை நசுக்கிவிட முடியாது (creativity can never be crushed) எனும் வாசகமும் இடம்பெறுகிறது. இத்துடன் கேலக்ஸி டேப் S9 அல்ட்ரா மாடலும் காண்பிக்கப்படுகிறது. சாம்சங் வெளியிட்ட புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


    Next Story
    ×