search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    மூன்று முறை மாற்றம்.. டுவிட்டர் பதிவுகளை யார்யார், எத்தனை முறை பார்க்க முடியும் தெரியுமா?
    X

    மூன்று முறை மாற்றம்.. டுவிட்டர் பதிவுகளை யார்யார், எத்தனை முறை பார்க்க முடியும் தெரியுமா?

    • டுவிட்டரின் இந்த முடிவுக்கு பயனர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
    • கட்டுப்பாடு மூலம் பயனர்கள் ஒரு நாளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே டுவிட்டர் பதிவுகளை பார்க்க முடியும்.

    டுவிட்டர் நிறுவனம் பயனர்கள் ஒரு நாளில் எத்தனை ட்விட்களை பார்க்க முடியும் என்பதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. ஏஐ ஸ்டார்ட்அப்-கள் மேற்கொள்ளும் தகவல் திருட்டு தான் இதற்கு முக்கிய காரணம் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    தற்போது விதிக்கப்பட்டு இருக்கும் தற்காலிக கட்டுப்பாடு மூலம் பயனர்கள் ஒரு நாளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே டுவிட்டர் பதிவுகளை பார்க்க முடியும். டுவிட்டரின் இந்த முடிவுக்கு பயனர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுபற்றிய அறிவிப்பு கடந்த சனிக்கிழமை எலான் மஸ்க் அறிவித்து இருந்தார்.

    அதன்படி வெரிஃபைடு பெற்று இருக்கும் டுவிட்டர் பயனர்கள் ஒரு நாளில் 6 ஆயிரம் பதிவுகளை பார்க்க முடியும். வெரிஃபைடு பெறாத பயனர்கள் நாள் ஒன்றுக்கு 600 பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும். வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் நாள் ஒன்றுக்கு 300 பதிவுகளை பார்க்க முடியும்.

    "தகவல் திருட்டு மற்றும் சிஸ்டம் தவறாக கையாளுவது உள்ளிட்டவைகளை எதிர்கொள்ளும் நோக்கில், நாங்கள் தற்காலிக கட்டுப்பாடுகள்- வெரிஃபைடு அக்கவுன்ட்கள் தினமும் 6 ஆயிரம் பதிவுகள் / வெரிஃபைடு இல்லா பயனர்கள் தினமும் 600 பதிவுகளையும், வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் தினமும் 300 அக்கவுன்ட்களையும் பார்க்க முடியும்," என்று எலான் மஸ்க் டுவிட் செய்து இருந்தார்.

    பிறகு இரண்டு மணி நேரம் கழித்து மற்றொரு பதிவில், எலான் மஸ்க் வெரிஃபைடு அக்கவுன்ட்கள் தினமும் 8 ஆயிரம் பதிவுகளையும், வெரிஃபைடு இல்லாத பயனர்கள் தினமும் 800 பதிவுகளையும், வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் தினமும் 400 பதிவுகளையும் பார்க்க முடியும் என்று தெரிவித்தார்.

    இந்த எண்ணிக்கையையும் எலான் மஸ்க் மீண்டும் மாற்றினார். தற்போது வெரிஃபைடு அக்கவுன்ட்கள் தினமும் 10 ஆயிரம் பதிவுகள், வெரிஃபைடு இல்லாதவர்கள் தினமும் ஆயிரம் பதிவுகள், வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் தினமும் 500 பதிவுகளை பார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×