search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ரூ. 1 கோடியே 12 லட்சம் வாடகை பாக்கி வைத்த எலான் மஸ்க் - டுவிட்டருக்கு புது சிக்கல்!
    X

    ரூ. 1 கோடியே 12 லட்சம் வாடகை பாக்கி வைத்த எலான் மஸ்க் - டுவிட்டருக்கு புது சிக்கல்!

    • டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து அந்நிறுவனம் ஏராளமான சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
    • டுவிட்டர் சமூக வலைதளத்தில் ஏராளமான மாற்றங்கள், புது வசதிகள் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

    டுவிட்டர் நிறுவனத்தின் சான் ஃபிரான்சிஸ்கோ அலுவலக கட்டிடத்திற்கு வாடகை செலுத்த காரணத்தால் அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. ஹார்ட்ஃபோர்டு பில்டிங் -- கொலம்பியா ரெய்ட் - 650 கலிஃபோர்னியா எல்எல்சி உரிமையாளர் டுவிட்டர் நிறுவனத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்து இருக்கிறார். கட்டிடத்தின் 30 ஆவது தளத்தில் டுவிட்டர் நிறுனவன அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    2017 வாக்கில் டுவிட்டர் நிறுவனத்திற்கான கலிஃபோர்னியா அலுவலகம் லீஸ் முறையில் வாடகைக்கு எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், சர்வதேச அலுவலகங்களுக்கான வாடகையை டுவிட்டர் நிறுவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதில் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள தலைமையகமும் அடங்கும். வாடகை பாக்கி வைக்கப்பட்டு இருக்கும் அலுவலகங்கள் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நீண்ட காலம் மூடியே வைக்கப்பட்டு இருந்தன.

    மேலும் டுவிட்டர் ஊழியர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்து கொள்ளலாம் எனும் திட்டம் அமலில் இருந்து வந்தது. சமீபத்தில் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து வீட்டில் இருந்து பணியாற்றும் முறையை எலான் மஸ்க் முடிவுக்கு கொண்டுவந்தார். இதோடு டுவிட்டர் நிறுவனத்தில் கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதன் மூலம் பயனர் எண்ணிக்கை மற்றும் வருவாயை அதிகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டது.

    அலுவலக வாடகை மட்டுமின்றி டுவிட்டர் நிறுவனம் இரண்டு தனி விமானங்களுக்கான வாடகையை ஜெட் சர்வீசஸ் எல்எல்சி குழுமத்திற்கு செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது. ஜெட் சர்வீசஸ் எல்எல்சி நிறுவனமும் டுவிட்டர் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருக்கிறது. தனி விமானங்களுக்கான வாடகை பாக்கி மட்டும் இந்திய மதிப்பில் ரூ. 1 கோடியே 63 லட்சம் என கூறப்படுகிறது.

    Next Story
    ×