search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3900 வழங்கும் ஆப்பிள்

    ஐபோன் வாடிக்கையாளர்களில் பேட்டரியை மாற்றியவர்களுக்கு ரூ.3900 கிரெடிட் வழங்குவதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.
    கலிஃபோர்னியா:

    ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்த ஐபோன் மாடல்களில் வழங்கப்பட்டிருந்த பேட்டரிக்கள் ஐபோன்களின் வேகத்தை குறைத்து, அவற்றை வேண்டுமென்றே ஷட் டவுன் செய்ய வைத்தது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தெரியவந்தது. இந்த விவகாரம் பூதாகாரமாய் வெடித்த நிலையில் ஆப்பிள் தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியது.

    இதுமட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக பேட்டரி மாற்றுவோருக்கு ஆப்பிள் சார்பில் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டது. தற்சமயம் ஐபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் பேட்டரியை மாற்றுவோருக்கு ரூ.3900 கிரெடிட் வழங்குவதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.

    ஆப்பிள் வழங்கும் தொகையை பெற தகுதி உள்ளவர்களுக்கு பேட்டரியை மாற்றும் போது இந்த தொகை ஆன்லைன் மூலமாகவோ அல்லது வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த பயன்படுத்தும் கிரெடிட் கார்டுகளுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய வாடிக்கையாளர்களுக்கு மே 23-ம் தேதி முதல் மின்னஞ்சல் வாயிலாக ஆப்பிள் சார்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.


    கோப்பு படம்

    இந்த விவகாரத்தில் ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ், ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ் மற்றும் ஐபோன் எஸ்இ உள்ளிட்ட மாடல்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. 

    ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31, 2018 வரை ஐபோன் 6 அல்லது அதற்கும் அதிக மாடல்களை பயன்படுத்திய வாடிக்கையாளர்ளில் வாரன்டி இல்லாமல் தங்களது பேட்டரிகளை மாற்றியிருந்தால் இந்த சலுகையில் தகுதியுடையவர்களாவர் என ஆப்பிள் நிறுவனம் புதிதாய் துவங்கியுள்ள சப்போர்ட் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஆப்பிள் ஐபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் பேட்டரியை ஆப்பிள் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களில் மாற்றியவர்களுக்கு மட்டுமே கிரெடிட் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாரன்டியில் உள்ள ஐபோன் பேட்டரிகளை மாற்றியவர்களுக்கும் இது பொருந்தும்.

    ஆப்பிள் கிரெடிட் திட்டத்திற்கு தகுதியுடைவர்களுக்கு மே 23-ம் தேதி முதல் ஜூலை 27-ம் தேதிக்குள் மின்னஞ்சல் மூலம் ஆப்பிள் நிறுவனம் தொடர்பு கொள்ளும். ஒருவேளை ஆப்பிள் சார்பில் தொடர்பு கொள்ளப்படவில்லை எனில், டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆப்பிள் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையத்தை அனுகலாம்.
    Next Story
    ×