search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    பட்ஜெட் விலையில் நோக்கியா X5 ஸ்மார்ட்போன் அறிமுகம்
    X

    பட்ஜெட் விலையில் நோக்கியா X5 ஸ்மார்ட்போன் அறிமுகம்

    ஹெச்.எம்.டி. குளோபல் ஏற்கனவே அறிவித்ததை போன்று நோக்கியா X5 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #NokiaX5



    ஹெச்.எம்.டி. குளோபல் தனது X சீரிஸ் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று புதிய ஸ்மார்ட்போன் நோக்கியா X5 என பெயரிடப்பட்டுள்ளது.

    நோக்கியா X5 ஸ்மார்ட்போனில் 5.86 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 16:9 ரக 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர் மற்றும் அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு 8.1 ஓ.எஸ். கொண்டிருக்கும் நோக்கியா X5 ஆன்ட்ராய்டு பி அப்டேட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    புகைப்படங்களை எடுக்க 13 எம்பி + 5 எம்பி டூயல் பிரைமரி கேமரா செட்டப் கொண்டுள்ளது. இதை கொண்டு ஏ.ஐ. போர்டிரெயிட் புகைப்படங்களை எடுக்க முடியும். இத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமரா, மற்றும் ஏ.ஐ. சார்ந்த செல்ஃபி போர்டிரெயிட் மற்றும் பியூட்டி மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



    நோக்கியா X5 சிறப்பம்சங்கள்:

    - 5.86 இன்ச் 720x1520 பிக்சல் ஹெச்டி+ 2.5D வளைந்த கிளாஸ் 19:9 ரக டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர் மற்றும் 800MHz ARM 
    - மாலி-G72 MP3 GPU
    - 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், F/2.0, PDAF
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 3060 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    நோக்கியா X5 ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் புளு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,200) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை 1399 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.14,300) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #NokiaX5 #smartphone
    Next Story
    ×