என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
சென்னையில் ஐபோன் உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதி
Byமாலை மலர்25 Dec 2018 6:27 AM GMT (Updated: 25 Dec 2018 6:27 AM GMT)
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் அமைந்திருக்கும் ஃபாக்ஸ்கான் செல்போன் உற்பத்தி ஆலையில், ஐபோன்களை உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதியளித்திருக்கிறது. #iPhone
தைவானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வருகிறது.
15 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வரும் ஃபாக்ஸ்கான் ஆலையில் 90 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். ஃபாக்ஸ்கான் ஆலையில் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த செல்போன்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஃபாக்ஸ்கான் ஆலையில் ஐபோன்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு, இதற்காக தமிழக அரசின் ஒப்புதலுக்கு விண்ணப்பிக்கப்பட்டது.
நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஃபாக்ஸ்கான் ஆலையில் ஐபோன் தயாரிக்க அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் நிறுவன வளாகத்தில் ஏற்கனவே இதற்கென தனி ஆலை உருவாக்கப்பட்டு உள்ளது. அங்கு தட்டுப்பாடுக்கு ஏற்ப புதிய ஐபோன் மாடல்கள் தயாரிக்கப்பட இருக்கிறது.
அடுத்த ஆண்டு முதல் புதிய ஐபோன்களின் உற்பத்தி சென்னை ஃபாக்ஸ்கான் ஆலையில் தொடங்கப்படுகிறது. ஐபோன்கள் விலை உயர்ந்த சாதனம் என்பதால் இவை சென்னையில் தயாரிக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இது தொடர்பாக கூறும் போது, ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டிலேயே தனது தொழிலை மேலும் விருத்தி செய்யும் வகையிலும் இங்கிருந்து வெளிமாநிலத்துக்கு சென்று விடாமல் தடுக்கும் வகையிலும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.
Next Story
×