search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    ஜோகோவிச் போட்டியை இரவு 10.30 மணிக்கு வைத்தது மிகப்பெரிய தவறு: முன்னாள் ஜாம்பவான் குற்றச்சாட்டு
    X

    ஜோகோவிச் போட்டியை இரவு 10.30 மணிக்கு வைத்தது மிகப்பெரிய தவறு: முன்னாள் ஜாம்பவான் குற்றச்சாட்டு

    • ஜோகோவிச் 10.30 மணிக்கு போட்டியை தொடங்கியதால் அதிகாலை 3 மணிக்கு முடிவடைந்தது.
    • 8 மணிக்கு தொடங்காதது அமைப்பாளர்களின் தவறு என முன்னாள் வீரர் ஜான் மெக்என்ரோ குற்றச்சாட்டு.

    உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரராக திகழ்ந்து வருபவர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச். நடால் உள்ளிட்ட முன்னிட்ட வீரர்கள் தொடக்கத்திலேயே வெளியேறியதால் ஜோகோவிச் பிரெஞ்சு ஓபனை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் 4-வது சுற்றில் ஜோகோவிச் அர்ஜென்டினாவின் செருண்டோலோவை எதிர்கொண்டார். தரநிலையில் முதல் இடத்தில் இருந்த ஜோகோவிச்சுக்கு 23-ம் நிலை வீரரான செருண்டோலோ கடும் சவாலாக திகழ்ந்தார். இதனால் ஜோகோவிச் ஐந்து செட்கள் வரை விளையாட வேண்டியிருந்தது.

    4-வது செட்டில் விளையாடும்போது கால் மூட்டில் ஜோகோவிச்சிற்கு காயம் ஏற்பட்டது. அந்த காயத்துடன் விளையாடி வெற்றி பெற்றார். இதனால் காலிறுதியில் அவரால் விளையாட முடியாமல் போய்விட்டது. இதனால் போட்டியில் இருந்து வெளியேறியதுடன் நம்பர் ஒன் இடத்தையும் இழந்தார்.

    காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறார். இதனால் விம்பிள்டனில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஜோகோவிச்சை போட்டியை 10.30 மணிக்கு தொடங்கியதுதான் காயத்திற்கு முக்கிய காரணம் என முன்னாள் ஜாம்பவான் ஜான் மெக்என்ரோ போட்டி அமைப்பாளர் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக ஜான் மெக்என்ரோ கூறுகையில் "3-வதுசுற்றில் டிமிட்ரோவ்- பெர்க்ஸ் இடையிலான போட்டி மழையால் ஒத்திவைக்கப்பட்டது இந்த போட்டி பாரீஸ் உள்ளூர் நேரப்படி 8 மணிக்கு ஜோகோவிச் விளையாடும் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. இந்த நேரத்தில் ஜோகோவிச் போட்டியை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் போட்டியை தொடங்க முடியவில்லை.

    10.30 மணிக்குதான் போட்டி தொடங்கியது. ஐந்த செட் வரை நீடித்ததால் அதிகாலை 3 மணிக்குதான் போட்டி முடிவடைந்தது. இந்த போட்டியால் ஜோகோவிச் எத்தனை போட்டியை இழக்க போகிறார் என்பதை தெரியாமல் அமைப்பாளர்கள் மிகப்பெரிய தவறை செய்துவிட்டனர். காலநிலை (Weather) மிகவும் மோசமான இருந்தது. அது கஷ்டனமா நிலையை உருவாக்கியது." என்றார்.

    Next Story
    ×