என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
- மணல் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
- போலீசார் நடவடிக்கை
அரியலூர்:
அரியலூர் அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் கிராம நிர்வாக அலுவலர் மீனாம்பிகைக்கு கசனை ஏரியில் மணல் திருட்டு நடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உதவியாளருடன் சென்று கசனை ஏரியில் பார்த்த போது அங்கு சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் திருடி கொண்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மணல் திருட்டில் ஈடுபட்ட சிவக்குமார் (வயது 25), அன்பரசன் (35) ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
- பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது
- சுண்ணாம்புக்கல் எடுப்பது தொடர்பாக நடைபெறுகிறது
அரியலூர்:
கயர்லாபாத்தில் சுண்ணாம்புக்கல் எடுப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கல்லங்குறிச்சியில் 23-ந்தேதி நடக்கிறது என்று என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-அரியலூர் மாவட்டம், அரியலூர் தாலுகா, பழங்காநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள டால்மியா சிமெண்டு (பாரத்) லிமிடெட் நிறுவனத்தின் சுண்ணாம்புக்கல் சுரங்கம் விஸ்தீரணம் 2.25.0 ஹெக்டேர், புல எண். 455/1, 456/2- 456/3 கயர்லாபாத் கிராமத்தில் சுண்ணாம்புக்கல் எடுக்க உத்தேசித்துள்ளது.இதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தில் லால்குடியார் திருமண மண்டபத்தில் வருகிற 23-ந்தேதி காலை 11 மணியளவில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்ற இடங்களில் வாழும் உண்மையான குடிமக்கள், சுற்றுச்சூழல் குழுக்கள் மற்றும் பிறர் உள்ளடங்கலாக அனைவரும் பங்கேற்கலாம்.மேற்கண்ட தொழிற்திட்டங்களை பற்றி அவர்களுடைய கருத்துக்களை வாய் மொழியாகவோ, எழுத்து வடிவிலோ தெரிவிக்கலாம். அவை பதிவு செய்யப்பட்டு மேல்நடவடிக்கைக்காக மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், சென்னை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தின் மீதான குறிப்பிடத்தகுந்த வாய்ப்பினை பெற்றிருக்கும் சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம், என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- எந்த கட்சியுடனும் சேர்ந்து போராட தயார் என்று வேல் முருகன் தெரிவித்துள்ளார்
- முழு மதுவிலக்குக்காக
அரியலூர்,
தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் அரியலூர் காமராஜர் திடலில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த வேல்முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-தமிழகத்தில் முழு மதுவிலக்கு வேண்டும். ஒரு சொட்டு மதுகூட தமிழகத்தில் இருக்கக்கூடாது என்பதுதான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நோக்கம். இதற்காக எந்த கட்சியுடன் வேண்டுமானாலும் சேர்ந்து போராட தயாராக இருக்கிறேன். அரசியல் காரணங்களுக்காக மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுகளை கூறாமல், உண்மையிலேயே ஊழல் புரிந்ததற்கான ஆவணங்கள், தரவுகள் இருந்தால் அதனடிப்படையில் ஊழலை எதிர்க்க வேண்டும்.குறிப்பாக பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை தி.மு.க.வினரின் ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக கூறிவிட்டு, இணையத்தில் எளிதில் கிடைக்கக்கூடிய முன்னாள், இன்னாள் அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டுள்ளார். இது போன்ற மோசடி வித்தைகளை காட்டக் கூடாது என்பதே எனது வேணடுகோள் என்றார்.
- ரூ.1.2 கோடியில் புதிய தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது
- புகழூர் நகராட்சி பகுதியில் தொடங்கியது
கரூர்,
கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி பகுதிகளில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2022 2023-ம் நிதியாண்டில் ரூ.1.2 கோடி மதிப்பீட்டில் தார் சாலைகள் புதுப்பித்தல் பணிகளுக்கான பூமிபூஜை நடைபெற்றது.விழாவிற்கு புகழூர் நகர் மன்ற தலைவர் நொய்யல் சேகர் (எ) குணசேகரன் தலைமை வகித்தார். புகழூர் நகராட்சி ஆணையாளர் கனிராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர் இளங்கோ கலந்து கொண்டு புகழூர் நகராட்சி வார்டு எண்: 2,3,4,6,7,9,11,12, 17,20,22,24 ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட தார் சாலைகள் புதுப்பித்தல் பணிகளுக்கான பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். விழாவில் மாநில, மாவட்ட, நகர கழக நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், வார்டு கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- சாலை விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.
- சாலை மைய தடுப்பு கட்டையில் மோதி விபத்து
கரூர்:
கரூர் சுகாதார ஆய்வாளர்கள் கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா தரகம்பட்டி கே.கே. எம் நகரை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 40), அதே பகுதியை கொசூரை சேர்ந்தவர் குமரேசன் (31), காக்கயம்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (37). இதில் மகேஸ்வரன் தோகைமலை அருகே உள்ள சேப்பலாப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராகவும், குமரேசன் மற்றும் கண்ணன் இருவரும் தோகைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்தநிலையில் இவர்கள் 3 பேரும் நேற்று அவர்களின் பதவி உயர்வுக்கான சான்றிதழ்களை கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிப்பதற்காக ஒரு காரில் சென்றனர். பின்னர் சான்றிதழ்களை சமர்ப்பித்து விட்டு மாலையில் வெள்ளியணை வழியாக வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். காரை மகேஸ்வரன் ஓட்டி சென்றார்.
- விழிப்புணர்வு முகாம் நடந்தது
- அரசின் நலத்திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறப்பட்டது
கரூர்,
கரூர் பள்ளப்பட்டியில் சிறுபான்மையினருக்கான நலத்திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளப் பட்டி நகராட்சி தலைவர் எஸ்.ஏ.முனவர்ஜான் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் கே.பி. குமரன் முன்னிலை வகித்தார். சிறுபான்மை மக்களுக்கு வங்கி கடன், தொழில் தொடங்க கடன், மாணவ மாணவிகளுக்கு கல்விக்கடன் உள்ளிட்ட பலதரப்பட்ட அரசின் நலத்திட்டங்கள் பற்றி ஒவ்வொரு துறை வாயிலாக எடுத்துக் கூறப்பட்டது.
- வீட்டில் இருந்த கல்லுாரி மாணவி மாயமானார்
- கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்
கரூர்:
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த, பாலவிடுதியை சேர்ந்தவர் இளையராணி (வயது 50). இவரது மகள் கார்த்திகா, சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது கல்லூரி விடுமுறை என்பதால் ெசாந்த ஊருக்கு கார்த்திகா வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த கார்த்திகா திடீரென மாயமானார். இச்சம்பவம் தொடர்பாக மாணவியின் தாயார் இளையராணி கொடுத்த புகாரின் பேரில் பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சட்ட விரோதமாக மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்
- போலீசாருக்கு தகவல் வந்ததை தொடர்ந்து நடவடிக்கை
கரூர்.
கரூர் மாவட்டம் குளித்தலை காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக குளித்தலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வைபுதூர் புதுப்பாளை யம், மேல குட்டப்பட்டி, வாலாந்தூர் ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது மது விற்ற கரிகாலன் (வயது 50), வீரமலை (57), இளங்கோவன் (50), ராமன் (52), செந்தில்குமார் (52) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 31மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- முத்துமாரியம்மன் கோவில் தெப்ப உற்வம் நடைபெற்றது
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
புதுக்கோட்டை:
அரிமளம் அருகே ராயவரம் முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 1-ந் தேதி பூச்சொரிதல், 8-ந்் தேதி காப்பு கட்டுதலுடன் முதல் நாள் திருவிழா தொடங்கியது. திருவிழாவின் ஒவ்வொரு நாள் இரவும் அண்ணா சீரணி கலையரங்கில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனிடையே நேற்று முன்தினம் 9-ம் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்ட நிலையில் தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவும், தொடர்ந்து நள்ளிரவு கோவில் அருகே அமைந்துள்ள ஊரணியில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதையடுத்து தெப்பத்தில் சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் எழுந்தருளினார். இதையடுத்து தெப்பத்தில் வலம் வந்து முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து முத்துமாரியம்மன் கோவிலில் காப்பு கலைக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.
- ரேஷன் கடை விற்பனையாளர்கள்- எடையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
- கலெக்டர் வழங்கினார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை ரேஷன் கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்கள் சிறப்பாகவும், பொதுமக்கள் வரவேற்கத்தக்க வகையில், பணிபுரியும் பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, ஆர்.ஆர்.விற்பனையாளர் எஸ்.தனபால் முதல் பரிசு ரூ.4 ஆயிரமும், ஆலங்குடி தாலுகா, சிக்கப்பட்டி விற்பனையாளர் எஸ்.அமுதாவுக்கு 2-வது பரிசு ரூ.3 ஆயிரமும், திருமயம் சி.எம்.எஸ். எடையாளர் சி.ராமாயிக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரமும், மீமிசல் எடையாளர் ஆர்.கண்ணகிக்கு 2-வது பரிசு 2 ஆயிரம் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் கவிதாராமு வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வழங்கல் அலுவலர் கணேசன், கூட்டுறவு சரக துணைபதிவாளர் சு.சதீஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கண்களில் மிளகாய் பொடியை தூவி அடி-உதை
- வாலிபரை தாக்கிய 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்
புதுக்கோட்டை
கந்தர்வகோட்டை மட்டங்கால் கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி மகன் ரெங்கநாதன் (வயது 35). அதே ஊரை சேர்ந்த அவரது உறவினர்கள் வீரபாண்டி (30), முருகேசன் (25), இவர்களது நண்பர் ராஜ்குமார். ரெங்கநாதனுக்கும், வீரபாண்டி, முருகேசன் ஆகியோருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்துள்ளது. இந்நிலையில் வீரபாண்டி உள்பட 3 பேரும் ரெங்கநாதனை வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்று அழைத்துள்ளனர். இதை நம்பி அங்கு சென்ற ரெங்கநாதனின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி தாக்கினர். இதில் மயக்கம் அடைந்த ரங்கநாதனை அங்கேயே விட்டு விட்டு 3 பேரும் தப்பி சென்று விட்டனர். ரெங்கநாதனின் சத்தத்தை கேட்ட அந்த வழியாக சென்றவர்கள் ரெங்கநாதனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில், கந்தர்வகோட்டை ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து வீரபாண்டி உள்பட 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
- ஊரக வேலை உறுத்தித் திட்ட பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
- பட்டியலில் பெயர் சேர்க்க கோரி நடந்தது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே குளமங்கலம் வடக்கு ஊராட்சியில் ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களின் பணி அட்டை புதுப்பிக்கப்பட்டு, பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் 60 பேரின் பெயர்கள் இல்லை என கூறப்படுகிறது. இதை கண்டித்தும், விடுபட்டடோரை பட்டியலில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தியும், குளமங்கலம் வடக்கு ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ஊராக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்