ஆன்மிக களஞ்சியம்

ஆடி மகத்துவம்-எலுமிச்சம்பழம்

Published On 2024-07-16 11:08 GMT   |   Update On 2024-07-16 11:08 GMT
  • பிரசாதமாக பெறப்படும் எலுமிச்சம் பழங்களை எந்த காரணம் கொண்டும் ஊறுகாய் போடவோ அல்லது ஜூஸ் போடவோ பயன்படுத்தாதீர்கள்.
  • அதன் புனிதம் உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

மூன்றாவதாக எலுமிச்சம் பழம். அம்மன் ஆலயங்களில் எலுமிச்சையின் பயன்பாடு மிக, மிக அதிகம், ஆடி மாதம் எந்த அளவுக்கு எலுமிச்சையை பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு அது நமக்கு நன்மை தரும்.

பொதுவாகவே எலுமிச்சை பழத்தில் தெய்வீக சக்தி மிக அதிகம் உண்டு என்பார்கள். அதனால் தான் எலுமிச்சம் பழத்துக்கு 'ராஜகனி' என்றும் ஒரு பெயர் உண்டு.

ஆடி மாதம் துர்க்கைக்கு எலுமிச்சை மாலை சாத்தி வழிபட வேண்டும். 22,45,84,108 என்ற எண்ணிக்கையில் எலுமிச்சம் பழ மாலை இருக்க வேண்டும்.

கெட்டுப்போன அல்லது நசுங்கி போன எலுமிச்சம் பழங்களை மாலையில் சேர்க்கக்கூடாது.

ஆடி மாதம் செவ்வாய், வெள்ளி, பவுர்ணமி, அமாவாசை, அஷ்டமி நாட்களில் அம்மனுக்கு எலுமிச்சம்பழ மாலை அணிவித்து வழிபாடு செய்தால் உரிய பலன்கள் கிடைக்கும்.

துர்க்கை அம்மனுக்கு அணிவித்து வழிபாடு செய்த எலுமிச்சம் பழ மாலையில் உள்ள எலுமிச்சைகளை பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகம் செய்யலாம்.

அந்த எலுமிச்சம் பழத்தை வீட்டின் பூஜை அறையில் வைக்கலாம். அல்லது வீட்டு வாசலில் இரு பக்க ஓரங்களிலும் கால் படாதபடி வைக்கலாம்.

இதனால் துஷ்ட சக்திகள் வீட்டுக்குள் வராது. அந்த அளவுக்கு அம்மன் கழுத்தில் இருந்து பெறப்படும் எலுமிச்சம் பழங்களுக்கு அபார எதிர்ப்பு சக்தி உள்ளது.

பிரசாதமாக பெறப்படும் எலுமிச்சம் பழங்களை எந்த காரணம் கொண்டும் ஊறுகாய் போடவோ அல்லது ஜூஸ் போடவோ பயன்படுத்தாதீர்கள்.

அதன் புனிதம் உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

எனவே ஆடி மாதம் முழுவதும் வேப்பிலை, மஞ்சள், எலுமிச்சம் பழம் மூன்றையும் தாராளமாக நிறைய பயன்படுத்துங்கள்.

Tags:    

Similar News