ஆன்மிக களஞ்சியம்

ஆடி மகத்துவம்-மஞ்சள்

Published On 2024-07-16 11:04 GMT   |   Update On 2024-07-16 11:04 GMT
  • அது மட்டுமா... ஏழை எளிய பெண்களுக்கு மஞ்சளை தானமாக கொடுங்கள் என்ற நல்ல பழக்கத்தையும் ஏற்படுத்தினார்கள்.
  • இன்று கிராமங்களில் கூட பெண்கள் ஆடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் தேய்த்து நீராடுவது மிக, மிக குறைந்து விட்டது.

ஆடி மாதம் பெரும்பாலான பெண்கள் மஞ்சள் முகத்துடன் வலம் வருவதைப் பார்க்க முடியும்.

மஞ்சளுக்கு கிருமிகளை அழிக்கும் சக்தி உண்டு.

எவ்வளவு பெரிய கிருமியையும் மஞ்சள் மிக, மிக எளிதாக அழித்து விடும்.

தற்போது உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரசை மிக, மிக எளிதாக அழிக்கும் சக்தி மஞ்சளில் இருப்பதை உலக சுகாதார அமைப்பே ஏற்றுக் கொண்டுள்ளது.

மஞ்சள் கலந்த உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் கொரோனாவை மிக எளிதாக விரட்டலாம்.

குறிப்பாக பசும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது நோய் எதிர்ப்பு ஆற்றலை கணிசமான அளவுக்கு உயர்த்தும்.

மஞ்சளின் அருமையை புரிந்து கொண்ட நமது முன்னோர்கள் 'ஆடிச் செவ்வாய் தேடிக் குளி, அரைத்த மஞ்சளைப் பூசிக் குளி' என்று பழமொழி சொல்லி வைத்துள்ளனர்.

ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அதிகாலையில், புனித நதிகளில் மஞ்சள் தேய்த்து குளித்து மாரி அம்மனை வழிபட வேண்டும் என்ற மரபை உணர்த்தி உள்ளனர்.

அது மட்டுமா... ஏழை எளிய பெண்களுக்கு மஞ்சளை தானமாக கொடுங்கள் என்ற நல்ல பழக்கத்தையும் ஏற்படுத்தினார்கள்.

இன்று கிராமங்களில் கூட பெண்கள் ஆடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் தேய்த்து நீராடுவது மிக, மிக குறைந்து விட்டது.

பாத்ரூம் பக்கெட்டில் நாலு தடவை ஊற்றுவதோடு குளியல் முடிந்து விடுகிறது.

நம் முன்னோர்கள் சொல்லியபடி அரைத்த மஞ்சளை பூசி குளிக்க வேண்டும், இது தற்போதைய கொரோனா பரவல் காலத்தில் வைரஸ்களிடம் இருந்து பெண்களை நிச்சயம் பாதுகாக்கும்.

Tags:    

Similar News