ஆன்மிக களஞ்சியம்

நரசிம்மர் திருவுருவங்கள்

Published On 2023-07-15 11:28 GMT   |   Update On 2023-07-15 11:28 GMT
  • நவ (9) நரசிம்மர் என்ற எண்ணமே பரவலாக உள்ளது.
  • சிங்க முகமும், மனித உடலுமுள்ள நரசிம்மருக்குப் பொதுவாக இருப்பது ஒரு தலை, நான்கு கைகளே.

நரசிம்மர் பற்றியுள்ள பல இலக்கியங்களில் நரசிம்மரின் உருவ எண்ணிக்கை மிக அதிகமாக 74 ஆகவும், அடுத்து 23 ஆகவும் கருதப்பட்டாலும், நவ (9) நரசிம்மர் என்ற எண்ணமே பரவலாக உள்ளது. அவை:

1. அகோபில நரசிம்மர்

2. சத்ரவட நரசிம்மர்

3. யோகாநந்த நரசிம்மர்

4. காராஞ்ச நரசிம்மர்

5. பார்க்கவ நரசிம்மர்

6. வராக நரசிம்மர்

7. ஜ்வாலா நரசிம்மர்

8. பானக நரசிம்மர்

9. மாலோல நரசிம்மர்

சிங்க முகமும், மனித உடலுமுள்ள நரசிம்மருக்குப் பொதுவாக இருப்பது ஒரு தலை, நான்கு கைகளே.

எனினும் சில தலங்களில் நரசிம்மர் 5 முகமும், 8,10,16,18,26,32,64 கரங்களும் உடையவராகவும்; லட்சுமியுடன் அல்லது ஸ்ரீ தேவி பூதேவியோடு சேர்ந்திருப்பராகவும்; அமர்ந்து, நின்று நகருபவராகவும்; வராகமும் சிம்மமும் சேர்ந்த வடிவிலும் மாறுபட்ட இன்னும் பல உருவங்களோடும் பல ஆயுதங்களோடும் காணப்படுகிறார்.

Tags:    

Similar News