ஆன்மிக களஞ்சியம்

அனைத்து உயிர்களிடத்தும் வாசம் செய்யும் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆத்மா

Published On 2024-06-12 11:14 GMT   |   Update On 2024-06-12 11:14 GMT
  • ஆனால் அவர் உண்மையிலேயே திருடியது தனது பக்தர்களின் மனங்களில் உள்ள கெட்ட குணங்களைத் தான்.
  • பின்னர் அம்மனங்களைத் தனது தெய்வீக சக்தியால் நிரப்பி விடுவார்.

ஆயர்பாடியில் உள்ள கோபியர் கண்ணபிரானிடம் கொண்ட வேட்கை மிகுதியால் அவன் தம்மைக் காதலிக்க வேண்டி நோன்பு நோற்றனர். முடிவில் யமுனையில் நீராடச் சென்றனர்.

அங்கே அவர்கள் சேலைகளைக் கரையில் வைத்து விட்டு நீராடினர்.

கண்ணன் அந்த ஆடைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு அருகில் இருந்த மரத்தின் மேல் ஏறிக் கொண்டான்.

சிறிது நேரம் அவர்களை அலைக்கழித்தான். பின்பு அவர்கள் கைகூப்பி வணங்கிக் கேட்க, ஆடைகளைத் திருப்பி கொடுத்தான்.

ஸ்ரீகிருஷ்ணர், கோபிகைகளின் மேல் வைத்திருந்த தீராத அன்பின் காரணமாக அவர்களின் வீடுகளுக்குச் சென்று வெண்ணையினைத் திருடி ஆசை தீர உண்பார்.

ஆனால் அவர் உண்மையிலேயே திருடியது தனது பக்தர்களின் மனங்களில் உள்ள கெட்ட குணங்களைத் தான்.

பின்னர் அம்மனங்களைத் தனது தெய்வீக சக்தியால் நிரப்பி விடுவார்.

அதன் பயனாக அவர்கள் உலகை மறந்து ஸ்ரீகிருஷ்ணரிடமே அதிதீவிர பக்தி பூண்டு, அவரது பாதாரவிந்தத்தையே நினைத்துக் கொண்டிருந்தனர்.

அதனால் அவர்கள் எல்லையற்ற பேரானந்தத்தை அடைந்தனர்.

ஸ்ரீகிருஷ்ணரின் தனிப்பட்ட ஆத்மா, உலக உயிர்களிலெல்லாம் வாசம் செய்கின்றது என்பது இதன் மூலம் தெளிவாக விளங்குகின்றது.

Tags:    

Similar News