ஆன்மிக களஞ்சியம்
null

அதிசய மலை-ரிஷப வாகன காட்சி

Published On 2023-10-12 12:00 GMT   |   Update On 2023-10-17 06:39 GMT
  • இறைவன்,தேவியை ஆட்கொண்டு தம் இடப்பாகத்தை தேவிக்கு அருளியதாக புராணம் கூறுகிறது.
  • மலைச்சரிவின் ஒரு விளிம்பில், ரிஷப வாகனத்தின் தலைப்பகுதி மட்டும் தெரியும்.

இறைவனின் இடப்பாகத்தைப் பெற பார்வதிதேவி திருவண்ணாமலை கோவிலில் தவம் இயற்றி அப்பேற்றைப் பெற்றார்.

தேவியின் தவ வலிமை கண்டு இரங்கிய இறைவன் "மலை சுற்றும் வழியில் ரிஷப வாகனத்தில் வந்து ஆட்கொள்வேன்" என்றார்.

அதன்படி தேவி மலைவலம் வரும்போது நிருதி திசையின் திருப்பத்தில், ரிஷப வாகனத்தில் வந்த இறைவன்,

தேவியை ஆட்கொண்டு தம் இடப்பாகத்தை தேவிக்கு அருளியதாக புராணம் கூறுகிறது.

நிருதி லிங்கத்தை அடையும் இடத்திலிருந்து தெற்கிலிருந்து மேற்கு முகமாகத் திரும்பும் வளைவில்,

மலை வலம் வருவோர் நின்று மலையைப் பார்த்தால் மலைச்சரிவின் ஒரு விளிம்பில்,

ரிஷப வாகனத்தின் தலைப்பகுதி மட்டும் தெரியும்.

செங்கம் செல்லும் பாதையில் இருந்து பார்த்தாலும் இவ்வரிய காட்சியைக் காணலாம்.

பதிகங்கள் பிறந்த தலம்

திருஞானசம்பந்த சுவாமிகள், திருநாவுக்கரசு சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசக சுவாமிகள் முதலிய சமயப் பெரியார்கள் அண்ணாமலையானைப் பற்றி பாடி, பதிகங்களையும் இயற்றியுள்ளனர்.

முக்கியமாய் மாணிக்கவாசக சுவாமிகள் பாடிய திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி இத்தலத்தில் சிறந்தது.

இதுவுமன்றி, அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ், கந்தரலங்காரம் கந்தரனுபூதி, திருவகுப்பு முதலிய முருகப் பெருமான் திருவடிப்புகழ் நூல்கள் இங்கு தான் இயற்றப்பட்டன.

Tags:    

Similar News