ஆன்மிக களஞ்சியம்

பைரவரை வணங்கினால் கெட்ட நேரம் கூட நல்ல நேரமாகும்!

Published On 2024-06-02 08:08 GMT   |   Update On 2024-06-02 08:08 GMT
  • பைரவப் பெருமானை காலையில் வழிபட சர்வ நோய்களும் நீங்கும்.
  • பகலில் வழிபட விரும்பியது யாவும் கிட்டும்.

பைரவப் பெருமானை காலையில் வழிபட சர்வ நோய்களும் நீங்கும்.

பகலில் வழிபட விரும்பியது யாவும் கிட்டும். மாலையில் வழிபட இதுவரை செய்த பாவம் யாவும் விலகும்.

இரவு அதாவது அர்த்த சாமத்தில் வழிபட வாழ்வில் எல்லா வளமும் பெருகி மன ஒருமைப்பாடும் கிடைத்து முக்திநிலை என்ற இறைப்பரம்பொருளான பைரவப் பெருமானை அடையும் சாகாக் கல்வியும், மரணமில்லாப் பெருவாழ்வும் கூட கிட்டும்.

கும்பிட கால நேரம் கிடையாது

1. கால பைரவரை வணங்கினால் கெட்ட நேரம் நல்ல நேரம் ஆகும்.

2. நான்கு கைகளை உடையவர், சூலம், கபாலம், பாசகுஷம், டமரகம் ஆகியவை கைகளில் இருக்கும்.

3. இவரை கும்பிட கால நேரம் கிடையாது. 24 மணி நேரமும் வழிபடலாம். ஏனென்றால் கால நேரமே இவர்தான்.

4. படைத்தல், காத்தல், அழித்தல் என மும்மூர்த்திகளுக்கும் துணையாய் இருப்பவர் இவரே.

5. இவர் சைவம் மற்றும் வைணவம் இரண்டிற்கும் உரியவர்.

6.பாம்பினை பூனூலாகவும், அரைஞான் கொடியாகவும் அணிந்துள் ளார்.

7. இவரின் வாகனம் அசுரசுன வாகனம் (நாய்வாகனம்) மற்ற கோவிலில் சுன வாகனம் மட்டும் இருக்கும்.

8. நிர்வாண கோலம் இவருக்கு ஆனந்த கோலாகலம்.

9. வியாதிகளை குணப்படுத்துபவர்.

10. மேலும் ராமகிரி கோவிலில் நந்தி, நாய் வாகனம் இரண்டும் இருக்கும், மற்ற கோவிலில் நாய் வாகனம் மட்டும் இருக்கும்.

Tags:    

Similar News