ஆன்மிக களஞ்சியம்
null

கிரிவலத்தின் மேன்மையை உணர்த்தும் கதை

Published On 2023-10-12 11:32 GMT   |   Update On 2023-10-17 06:43 GMT
  • புனித தலங்களில் திருவண்ணாமலையில் மட்டுமே கிரிவலம் வரும் தன்மை உண்டு.
  • ஒரு ராஜா வேட்டைக்காக திருவண்ணாமலை பகுதிக்கு வந்தார்.

புனித தலங்களில் திருவண்ணாமலையில் மட்டுமே கிரிவலம் வரும் தன்மை உண்டு.

பல நூற்றாண்டுகளாக கிரிவலம் வருவது திருவண்ணாமலையில் வழக்கத்தில் இருக்கிறது.

கிரிவலம் வருவதால் நம் உடல் மனம் மற்றும் ஆன்மா இனம் புரியாத உயர் நிலைக்கு அழைத்து செல்லப்படுகிறது.

அவ்வாறு கிரிவலத்தின் மேன்மையை உணர வேண்டுமானால் கிரிவலம் வருவதற்கான சரியான முறையை தெரிந்து கொள்வது அவசியம்.

அருணாச்சல மஹாத்மியத்தில் கிரிவலம் பற்றி ஒரு கதை உண்டு.

ஒரு ராஜா வேட்டைக்காக திருவண்ணாமலை பகுதிக்கு வந்தார்.

அந்த காலத்தில் அது வனப்பிரதேசமாக இருந்தது.

ஒரு காட்டுப் பூனையை கண்டு அதை வேட்டையாட துரத்தினார்.

பூனையும் தன்னைக் காத்துக் கொள்ள ஓடத்துவங்கியது.

துரத்திய ராஜாவும், துரத்தப்பட்ட பூனையும் தங்களை அறியாமல் மலையை வலம் வந்தனர்.

ஒரு முறை சுற்றி முடிந்ததும் ராஜா திடீரென கீழே விழுந்தார்.

காரணம் மலையை சுற்றி வந்ததால் ராஜாவின் குதிரையும், காட்டுபூனையும் மோட்சம் அடைந்து மேலோகம் சென்றதாம்.

ஆனால் ராஜா செல்லவில்லை. காரணம், ராஜா வேறு சிந்தனையில் சுற்றினாராம்.,

பூனை தன்னை காக்க வேண்டும் என இறைவனை வேண்டியும், குதிரை பூனையை வேட்டையாட மன எண்ணம் இல்லாமலும் சுற்றியது என்பதால் மோட்சம் அடைந்ததாக சொல்லுகிறார்கள்.

Tags:    

Similar News