ஆன்மிக களஞ்சியம்

இருதயத்தில் தூய அன்பை புகுத்தும் புல்லாங்குழலின் இனிய கானம்

Published On 2024-06-10 06:23 GMT   |   Update On 2024-06-10 06:23 GMT
  • குழலோசை கோபிகைகளின் ஆத்மாவில் கலந்தது.
  • அவர்களை அவர்களே மறந்தார்கள். உலகமே அவர்களுக்கு ஒன்றுமில்லாமல் போனது.

பிரணவத்தின் ஓர் அடையாளம் தான் புல்லாங்குழல், அந்தக் குழலோசை தான் பக்தி நிறைந்த கோபிகைகளைக் கவர்ந்தது.

அவரது புல்லாங்குழலில் இருந்து வந்த இனிய கானம் அவர்களை இன்பமூட்டி, கிளர்ச்சியுண்டாக்கும்படி செய்தது.

கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசை இருதயத்தில் நுழைந்து, கேட்பவர் எவரையும், தனது சுற்றம், சுற்றியுள்ள உலகம் ஏன் தன்னையே கூட மறக்கடிக்கச் செய்யும்.

கேட்பவர் எவரையும் ஆனந்தக் கூத்தாடச் செய்து, அவர்களது இருதயம் முழுவதும் தூய அன்பு நிறைத்து விடும்.

தெய்வீகமான அப்புல்லாங்குழலில் இருந்து வரும் இனிய இசை வெள்ளம், கேட்பவரின் இருதயத்தில் பேரானந்தத்தை வழங்கி, புத்துணர்ச்சி மிக்க புதுவாழ்விற்கு கொண்டு செல்லும்.

அது ஆன்மீக மயக்கத்தைத் தோற்றுவித்து, உயிரற்ற உணர்வற்ற பொருட்களில் கூட இயக்கத்தை ஏற்படுத்தி விடும்.

அக்குழலின் இனிமையை விட உயர்வானது ஒன்றுமில்லை.

யாரொருவர் கண்ணபிரானின் குழலோசையினை ஒரு முறை கேட்டு விட்டார்களோ, அவர்கள் வானத்தில் உள்ள அமிர்தம், சொர்க்கம் ஆகியவற்றைக் கூட கூச்சமாக மதிப்பார்கள்.

குழலோசை கோபிகைகளின் ஆத்மாவில் கலந்தது.

அவர்களை அவர்களே மறந்தார்கள். உலகமே அவர்களுக்கு ஒன்றுமில்லாமல் போனது.

ஸ்ரீகிருஷ்ணரை நோக்கித் தங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாதபடி அவரது கானம் கவர்ந்திழுத்தன.

அவரவர் தங்களது வீட்டை விட்டு வர பயமோ, தயக்கமோ காட்டவில்லை. அவர்களுக்குள்ளே இருந்த ஆத்மா விழிப்புணர்வு பெற்றது.

அவர்களது எண்ணம், மனம் இவ்வுலகில் இல்லை.

Tags:    

Similar News