ஆன்மிக களஞ்சியம்

இயற்கை எழில் கொஞ்சும் ராமகிரி கால பைரவர் ஆலயம்

Published On 2024-05-28 10:39 GMT   |   Update On 2024-05-28 10:39 GMT
  • பசுமை நிறைந்த வயல்களும் பிரம்மாண்ட மலைகளும் சூழ்ந்திருக்கும் பின்னணியில் அமைந்திருக்கும் இந்த ஆலயம்
  • இத்தலத்தின் புராண பிரசித்தி பெற்ற அருள்மிகு மரகதாம்பிகை சமேத ஸ்ரீ வாலீஸ்வர சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், சத்தியவேடு தாலுகாவில், சென்னை, ஊத்துக்கோட்டை, பிச்சாட்டூர் புத்தூர் வழித்தடத்தில் நாகலாபுரத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் ஆரணியாற்றங்கரையில் அமைந்திருக்கும் பாடல் பெற்ற திருத்தலமே ராமகிரி என்று அழைக்கப்படும் திருக்காரிக்கரை கிராமம்.

ஒரு செவியில் குண்டலமும், மறு செவியில் தோடும் அணிந்து, ருத்திராட்ச மாலையுடன் தத்ரூபமாகத் திகழும், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிற்பம் ஒன்றே அதற்கு சான்று கூறப்போதுமானது.

பஸ் நிற்கும் இடத்தில் இருந்து வடக்கே சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் மலை அடிவாரத்தில் இத்தலம் அமைந்து இருக்கிறது.

இத்தலத்தின் புராண பிரசித்தி பெற்ற அருள்மிகு மரகதாம்பிகை சமேத ஸ்ரீ வாலீஸ்வர சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

பசுமை நிறைந்த வயல்களும் பிரம்மாண்ட மலைகளும் சூழ்ந்திருக்கும் பின்னணியில் அமைந்திருக்கும் இந்த ஆலயம் பல்லவர்கால சிற்பக்கலை நயத்துடன் திகழ்கிறது.

இயற்கை எழிலுடன் அமைதியான சூழ்நிலையில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தை தரிசிக்கும் பக்தர்கள் தெய்வ அருளைப் பெறுவதுடன் மனநிறைவு அடைவதும் திண்ணம்.

Tags:    

Similar News