ஆன்மிக களஞ்சியம்

கும்பகர்ணனை தூக்கி எறிந்த கும்பகர்ண பிள்ளையார்

Published On 2024-06-27 09:29 GMT   |   Update On 2024-06-27 09:29 GMT
  • மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்த எட்டய புரத்தில் உள்ள விநாயகர் பட்டத்துப்பிள்ளை என்றழைக்கப்படுகிறார்.
  • பதவி சம்பந்தமாக எந்தவிதமான பிரச்சினைகள் வந்தாலும் அதை இந்தப் பிள்ளையார் தீர்த்துவைப்பார் என்று ஐதீகம்.

பட்டத்து பிள்ளையார்

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்த எட்டய புரத்தில் உள்ள விநாயகர் பட்டத்துப்பிள்ளை என்றழைக்கப்படுகிறார்.

அந்தக்காலத்தில் எட்டயபுரத்து குறுநில மன்னர்கள் முடிசூட்டிக் கொள்ளும்போது இந்தப் பிள்ளையாரை வணங்கிய பிறகுதான் பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

பதவி சம்பந்தமாக எந்தவிதமான பிரச்சினைகள் வந்தாலும் அதை இந்தப் பிள்ளையார் தீர்த்துவைப்பார் என்று ஐதீகம்.

கும்பகர்ணப் பிள்ளையார்

கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழியாக திருவாரூர் செல்லும் பாதையில் திருக்கடுவாய்க் கரைப்புத்தூர் என்ற தலத்தில் கும்பகர்ண பிள்ளையார் இருக்கிறார்.

ஒரு முறை கும்பகர்ணனால் பாதிக்கப்பட்ட முனிவர்களின் வேண்டுதலுக்கு இணங்க தன் மகன் விநாயகரை பார்த்து கும்பகர்ணனை இலங்கைக்கு அப்பால் உயிரோடு தூக்கி வீசு என்று கூற, விநாயகரும் தன் தும்பிக்கையால் கும்பகர்ணனைத் தூக்கி எறிந்தார்.

விநாயகரால் கும்பகர்ணனின் தொல்லைகள் முனிவர்களுக்கு நீங்கியது. அன்று முதல் இந்த விநாயகருக்கு கும்பகர்ண பிள்ளையார் என்ற பெயர் வழங்கலாயிற்று.

Tags:    

Similar News