ஆன்மிக களஞ்சியம்

குடந்தை (கும்பகோண) நகர சிறப்புகள்

Published On 2024-07-01 11:07 GMT   |   Update On 2024-07-01 11:07 GMT
  • கும்பகோணம் நகரில் 100-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.
  • சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளுக்கும் கும்பகோணத்தில் ஆலயங்கள் உள்ளன.

1. குடம் என்றால் மேற்கு என்று பொருள். மூக்கு என்றால் மூக்கு போன்று குறுகிய வடிவம் என்று அர்த்தமாகும். அதாவது குடந்தை நகரம் மேற்கே மூக்கு போன்று குறுகியும் கிழக்கில் அகன்றும் விளங்குவதால் குடமூக்கு என்ற பெயரை பெற்றதாக சொல்கிறார்கள்.

2. சங்க இலக்கியங்களில் குடந்தை என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் 1384-ம் ஆண்டு முதல் கும்பகோணம் என்று அழைக்கப்பட்டது. சாரங்கபாணி கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டு இதை உறுதிபடுத்துகிறது.

3. கும்பகோணம் என்ற சொல் வடமொழி சொல் ஆகும். வடமொழியில் குடம் என்றால் கும்பம், மூக்கு என்றால் கோணம் என்று அர்த்தமாகும். அந்த அடிப்படையில் ஏற்பட்ட கும்பகோணம் என்ற பெயர் கடந்த 600 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

4. "குடமெடுத்து ஆடிய எந்தை" என்ற பாடல் வரியே குடந்தையாக மாறியதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

5. கும்பகோணத்துக்கு பாஸ்கரசேத்திரம், கல்யாணபுரம், தேவலோகப்பட்டனம், சிவவிஷ்ணுபுரம், மந்திராதி தேவஸ்தானம், சாரங்கராஜன்பட்டினம், சேந்திரசாரம், ஒளிர்மிகு பட்டணம் உள்பட பல பெயர்கள் இருந்தன. இந்த பெயர்கள் தற்போது வழக்கில் இல்லை.

6. கும்பகோணம் நகரில் 100-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.

7. சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளுக்கும் கும்பகோணத்தில் ஆலயங்கள் உள்ளன.

8. மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை தன்னுடைய திருக்குடந்தை புராணம், மங்களாம்பிகைப் பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களில் கும்பேசுவரரையும், மங்களாம்பிகையையும் போற்றி பாடியுள்ளார்.

Tags:    

Similar News