ஆன்மிக களஞ்சியம்

மாமன் கம்சன் அனுப்பிய அரக்கர்களை சிறு வயதிலேயே வதம் செய்த கண்ணன்

Published On 2024-06-12 11:01 GMT   |   Update On 2024-06-12 11:01 GMT
  • பிறந்தபோது சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளுடன் ஸ்ரீ கிருஷ்ணர் காட்சி அளித்தார்.
  • பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க சாதாரணக் குழந்தை வடிவானார்.

எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார்.

அதன்படி அதர்மத்தை அழிக்க பகவான் பூலோகத்தில் பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தி.

ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவில் சிறைக்குள் வசுதேவர்-தேவகிக்கு மகனாக ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்தார்.

பிறந்தபோது சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளுடன் ஸ்ரீ கிருஷ்ணர் காட்சி அளித்தார்.

பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க சாதாரணக் குழந்தை வடிவானார்.

3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தா வனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும், 8 வயது முதல் 10 வயது வரை மதுராவிலும் ஸ்ரீகிருஷ்ணரின் இளம் வயது கழிந்தது.

தன்னை வதம் செய்யவே கண்ணன் பிறந்திருக்கிறான் என்று எண்ணினான் கம்சன்.

அதனால் அவனை அழிக்க பல அரக்கர்களை அனுப்பினான். முதலில் வந்தவள் பூதகி என்ற அரக்கி.

அவள் பால் தருவது போல் நடித்தாள். ஆனால் கண்ணனோ அவளிடம் பாலைக் குடிப்பது போல் குடித்து அவளைக் கொன்று விட்டார்.

அரக்கியை தொடர்ந்து அரக்கர்கள் பல்வேறு உருவங்களில் வந்தார்கள்.

பராசுரன் கொக்காகவும், தேனுகாசுரன் கழுதையாகவும், பிரலம்பன் சிறுவனாகவும், அரிஷ்டன் காளையாகவும், கேசி குதிரையாகவும் உருவம் எடுத்து கண்ணனைக் கொல்ல முயன்றனர்.

ஆனால் 5 வயதில் இருந்த கண்ணன் அவர்களை எல்லாம் துவம்சம் செய்து கொன்றார்.

Tags:    

Similar News