ஆன்மிக களஞ்சியம்

மகத்துவம் கொண்ட பங்குனி தெய்வத் திருமணங்கள்!

Published On 2024-07-24 09:55 GMT   |   Update On 2024-07-24 09:55 GMT
  • ஆலயங்களில் இறைவழிபாடு தவிர அது தொடர்புடைய எத்தனையோ திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.
  • பழமையான ஆலயங்களில் ஆண்டு முழுவதும் வெவ்வேறு விதமான திருவிழாக்கள் நடைபெறுவதுண்டு.

ஆலயங்களில் இறைவழிபாடு தவிர அது தொடர்புடைய எத்தனையோ திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.

பழமையான ஆலயங்களில் ஆண்டு முழுவதும் வெவ்வேறு விதமான திருவிழாக்கள் நடைபெறுவதுண்டு.

இந்த திருவிழாக்கள் ஒவ்வொன்றின் பின்னால், பக்தர்களின் வாழ்க்கைக்கு உதவும் பல விஷயங்கள் அடங்கியுள்ளன.

இதனால் தான் ஆலயங்களில் நம் முன்னோர்கள் வகுத்து வைத்தப்படி திருவிழாக்களை நாம் இப்போதும் தொய்வின்றி நடத்தி வருகிறோம்.

சைவக் கோவில், வைணவக்கோவில், சக்தி ஆலயம் என்று எதுவாக இருந்தாலும் விழாக்கள் நடத்தும் போது பக்தர்களிடம் தனி உற்சாகம் ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும்.

மனதை பக்குவ நிலைக்கு உயர்த்தியுள்ள பக்தர்கள் ஆலயத் திருவிழாக்களின் போது தாங்கள் ஆன்மா உருக, உருக விழாக்களில் பங்கேற்பார்கள்.

அத்தகைய விழாக்களில் திருக்கல்யாணத் திருவிழா தனித்துவம் கொண்டது.

தமிழ்நாட்டில் பெரும்பாலான ஆலயங்களில் 10 நாட்கள் பெரிய திருவிழாக்கள் நடத்தும்போது திருக்கல்யாண விழா 6&ம் திருநாள் அல்லது 7&ம் திருநாளாக நடத்தப்படும்.

சில ஆலயங்களில் தனியாகவும் திருக்கல்யாண விழா நடைபெறுவது உண்டு.

ஆலய வழிபாடுகளில் ஒவ்வொரு மாதத்துக்கும், ஒவ்வொரு விழாவால் சிறப்பு ஏற்படும்.

அந்த வகையில் பங்குனி மாதம் உத்திரம் நடசத்திரம் திருநாள் மிகுந்த மகத்துவம் கொண்டது.

இந்த நாளில் மிக அதிகமான தெய்வத் திருமணங்கள் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

Tags:    

Similar News