ஆன்மிக களஞ்சியம்

நினைத்ததை நடத்தும் மரகதாம்பிகை

Published On 2024-06-02 08:14 GMT   |   Update On 2024-06-02 08:14 GMT

ராமகிரி ஆலயத்தில் வாலீஸ்வரர் சன்னதிக்கு அருகே மரகதாம்பிகை தனி சன்னதியில் உள்ளார்.

சுருட்டப்பள்ளி தலத்திலும் அம்பாளின் பெயர் மரகதாம்பிகைதான்.

இந்த இரண்டு மரகதாம்பிகையையும் ஒரே நாளில் தரிசனம் செய்வது மிகுந்த நன்மை தரும் என்பது சித்தூர் மாவட்ட மக்கள் நம்புகிறார்கள்.

ராமகிரி தலம் ஆதிகாலத்தில் தொண்டை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது.

ஆந்திரா மாநிலம் பிரிந்தபோதுதான் அது தனியாக சென்று விட்டது.

அந்த காலத்து தொண்டை மண்டலத்தில் 5 மரகதாம்பிகை ஆலயங்கள் மக்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்று இருந்தன.

அதில் தற்போது 2 ஆலயங்கள் சுருட்டப்பள்ளியிலும், ராமகிரியிலும் இருப்பது தெரிய வந்தது.

இந்த ஆலயங்களை ஒட்டிய தமிழக எல்லைப் பகுதியில் மேலும் 3 மரகதாம்பிகை ஆலயங்கள் உள்ளன.

இந்த 5 மரகதாம்பிகை ஆலயங்களுக்கு ஒரே நாளில் சென்று அம்பிகையை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

ராமகிரி மரகதாம்பாள் சன்னதி சுவற்றில் ஸ்ரீவாலீஸ்வரர் அந்தாதி பாடல் ஒன்று எழுதப்பட்டுள்ளது.

மகரதாம்பிகை புகழ் பாடும் அந்த பாடல் வருமாறு:

மரகதமே,அதிசுகமே மனம் நிறையும் சருதிலயமே

சரனெனவே உளயடைவோர்க்கருளிறியும் மதிவதன்

திரனெல்லாம் தந்தெனையே உன் புகழைப்பாட வைத்தாய்

திருமாலின் தங்கச்சியே குருவாக நிற்பாய்...

* வாழவொரு வழிகாட்டும் வடி வழகி எந்தன்

தோழியைப்போல் துணை நிற்பாள் தூய "மரகதமாய்"

ஆழம் நிறை கடலாகும் அவள் தனையே அறிய

அவனிதனில் முற்பட்டோர்க் கல்லல் என்று மிலையே....

* 'இலை மட்டு முண்டிறைவன் நிலைகன்ட அபர்னை

சிலையாக நிற்கின்றாள் "திருராமகிரியில்"

தொலையாத வினையில்லை இவள் பாதம் பற்ற

தொல்லுலகில் தூயவளாம், இவளை நீ நாடு...

-ஸ்ரீவாலீஸ்வரர் அந்தாதி (1:41:42)

Tags:    

Similar News